பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11S தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

இருக்கும்போது உங்களுக்கு விபத்து வாராமல் தடுக்கும்படி முற்காலம் உங்களுக்கு ஈசனுடைய தானம். தற்காலத்தைப் பற்றி நீங்களே சரியான தீர்மானம் செய்யவேண்டும்.

ஆதலால் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் பின் வருமாறு:-"நாம் உல கத்தை அறிந்த நெறி பிழையா? மனித இயல்பை நேரே அறியாமல் நாம் அதனுடன் சம்பந்தங்கள் வகுத்துக் கொண்டோமா ? மேற்குத் திசையின் மனவுணர்ச்சியே நேரானதா ? மானுவீகத்தின் பொது அவநம்பிக்கை யென்ற காப்புச் சுவரின் பின்னே அவள் ஜாதீய கேடிமத்தைக் கட்டுகிற வழிதான் நேர் வழியா?”

கிழக்கு ஜாதியொன் றெழுச்சி பெறுமோ என்று ஆலோசனை பண்ணும்போதே மேற்குத் திசை எத்தனை பயம் காட்டுகிறதென்பதை நீங்கள் கண்டு பிடித்திருக்கலாம். இதன் காரணம் யாதெனில் அவள் வாழ்விற்குத் துணையாகிய சக்தி தீய சக்தி. அது அவளுடனிருக்கும் வரை அவளுக்கு (மேற்குக்கு) rேமம்; இதர லோகத்துக்கு நடுக்கம். ஐரோப்பிய நவீன நாகரிகத்தின் ஜீவ விருப்பம் யாதெனில், சாத்தானத் தனக்கு மாத்திரம் சொந்தமாக வைத் துக்கொள்ள வேண்டுமென்பது. அவளுடைய ஸ்கல ஆயுதங்களையும் தந்திரங்களையும் இந்த ஒரே நோக் கத்தில் செலுத்துகிருள். சாத்தானை இங்ஙனம் கூவி நடத்தும் பூசைகள் செல்வத்தின் பாதை மூலமாக ஸ்ர்வ நாசத்தின் கரையிலே கொண்டு சேர்க்கும். கடவுளுட்ைய பூமியின் மீது மேற்குத் திசை அவிழ்த்துவிட்ட பிசாசுகள் அவளேயே பயமுறுத்து கின்றன. அவளைக் கோலடியா லே பயங்களுக்குள்ளே துரத்துகின்றன. எனவே, அவளுக்கு ஆறுதல் இல்லை. -~ள் பிடிக்க விளைவிக்கும் அபாயங்களையும்,