பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்தி கற்பிக்கும் பாஷை 蟹

அப்போது தொழிலும் இன்பமும் கல்வியும் எளிதாகி உண்மையான் வலிமை பெறும். இவை யெல்லாம் எப்போது நடைபெறுமென்பதை நானறி யேன். இவை நடக்கும் வரை நாம் தலைவணக்கத் துடன் உயர்ந்த கல்வி உயர்ந்த கட்டிடங்களிலேயே கிடைக்கும் என்ற உபதேசத்தைத் தான் கேட்டுக் கொண்டு பொறுத்திருக்க வேண்டும்.

ரூபங்களும், புறக்கோலங்களும், எதுவரை ஜீவ னுடைய லக்ஷனங்களாகத் தோன்றுமோ அதுவரை அவற்றைப் புறக்கணிப்பது லாபமில்லை யென்பதை நானறிவேன். ஆணுல்இதில் பொன்போலப் போற்றத் தகுந்த நடுமை நிலையை எய்த வேண்டுமென்று ஐரோப்பா மிகவும் முயற்சி செய்து பார்த்தும் கைதேறவில்லை. அப்படியிருக்க நாம் அந்நிலையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுமிடத்து நமக்கேன் தடைகள் செய்ய வேண்டும் ? அந்த நடுநிலை யாதெனில் டம்பமில்லாமலுமிருக்க வேண்டும் : ஏழையாகவும் கூடாது. இந்த விவகாரத்துக்கு அவனவன் தன் குனத்துக்குத் தக்க உபாயம் கண்டு பிடித்துக்கொள்ளுதல் தகும். பிறரிடமிருந்து கல்வி யின் விஷயத்தை அறிந்துகொள்ள நாம் எப்போதும் தயார். ஆளுல் பிறர் குணத்தையும் நமக்குள்ளே புகுத்த முயலுதல் நியாயமில்லை.

மேற்குத் திசையின் ஸ்வீகார புத்திரர் தமது ஸ்வீகாரத் தந்தையைவிட ஒரடி அதிகமாகவே பாய்கிருர்கள். அமெரிக்காவில் ராஜாங்கத்தார் பல பெரிய பாடசாலைகள் நடத்துகிரு.ர்கள். அங்கு பிள்ளைகள் கொடுக்கவேண்டிய சம்பளம் சொற்பத் திலும் சொற்பம்; ஐரோப்பாவிலும் ஏழைப் பிள்ளை களுக்காக மிகவும் குறைந்த சம்பளத்தில் பல பாட சாலைகள் நடக்கின்றன. தமது நாட்டில் வறுமை அதிகமென்பதைக் கருதி இங்கு படிப்பின் செலவைப்