பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

மென்று கூறி விடுக்க. ஆசியாவையும் ஐரோப்பாவை யும் இங்ஙனம் ஒற்றுமைப்படுத்துதற்குரிய பல புதிய உண்மைகளையும் அறங்களையும், தம்முடைய அற்புத மான நூல்களாலும், உபந்யாளங்களாலும் தெளிவு படுத்தி மஹான் டாகுர் இந்த பூமண்டலத்தையே தமக்குக் சடன்படுமாறு செய்துவிட்டார். இதனை ஜெர்மனி முற்றிலும் நன்ருக உணர்ந்துகொண்டு, அதன் பொருட்டாக நம் ரவீந்த்ரரிடம் அளவிறந்த மதிப்புச் செலுத்துவதுமன்றி அபாரமான நன்றியும் செலுத்துகிறது.

ஆஸ்த்ரியா தேசத்தில் பாரத கவிராஜ ரவீந்த்ர ருக்கு நடந்த உபசாரங்கள் வர்ணிக்கத் தக்கன அல்ல. 1921 ஜூன் 26-ஆந் தேதியன்று, லண்டன் "அப்லர்வர்' பத்திரிகையின் வியெந்நா நிருபர் எழுதிய கடிதமொன்றில் பின்வருமாறு கூறுகிருர்:"வியெந்நா நகரத்துப் பொதுஜனங்களாலும் பத்திராதிபர்களாலும், ஒருங்கே இத்தனே ஆழ்ந்த பக்தி சிரத்தைகளுடனே, இத்தனை ஒருமனமான புகழ்ச்சி வந்தனைகளுடனே நல்வரவேற்கப்பட்டோர், வேறெவரும் கவிகளிடையேயுமில்லை, பெரிய பெரிய ராஜ்ய தந்த்ரிகளிடையேயுமில்லை, வீர ஸேளுதிபதி களிடையேயு மில்லை; மன்னர்களிடையேயு மில்லை' என. ஆஹா இஃதன்ருே கீர்த்தி. இதனேக் குறிப்பிட் டன்ருே, முன்பு திருவள்ளுவனரும், தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ருர்.

தன் பொருட்டாகச் சேகரிக்கப்படும் கீர்த்தி யொரு கீர்த்தியாகுமோ? ஒரு தேச முழுமைக்கும்