பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

கீர்த்தி சேகரித்துக் கொடுப்போனுடைய புகழே புகழ். ரவீந்த்ரநாதர் இந்தியாவை பூலோக குரு வென்று பூமண்டலத்தார் கண் முன்னே நிலைநாட்டிக் கொடுத்தார். அவருடைய திருவடி மலர்கள் வாழ்க.

இந்தியாவின் ஞானுேப தேசமாகிய அமிர்தத் துக்கு, ஐரோப்பாவில் உயர்ந்த தரத்து மேதாவிகள் எத்தன வேட்கையுடன் காத்திருந்தன ரென்பது மேலே கூறிய ஆஸ்த்ரிய நிருபரின் கடிதத்திலே மற்றுெரு பகுதியில் பின்வரும் வசனத்தாலே நன்கு விளக்கப்படுகின்றது :-"இந்த நூற்ருண்டின் சிதறு பட்ட குழந்தைகளாகிய நாம் (ஐரோப்பியர் இப்போது ஒற்றுமையை நாடித் தவிப்பது போல் இதுவரை எப்போதும் தவித்தது கிடையாது.) நரகவாதனப் படுகிற நாம் இன்னும் எதிர்காலத்தில் இந்த மண்மீது தேவலோக அனுபவங்களெய்து வோம் என்று கனவுகள் காண்பதை விட வில்லை. இப்படியிருந்த எங்கள் முன்னே மற்ருெரு லோகத்திலிருந்தொரு மனிதன் வந்தது போலே டாகுர் வந்தார். அவரை நல்வரவு கூறி உபசரிப் பதற்கு இப்போது நாம் தகுதி பெற்றிருப்பதுபோல் இதுவரை எப்போது மிருந்ததில்லை. இப்போது ஆயத்தமாக இருப்பது போல், இதுவரை எப்போதும் ஆயத்தமாக இருந்தது கிடையாது. இஃது நேற்று அவருக்கு நடந்த உபசாரங்களாலே நன்கு விளங் கிற்று' என்று அந் நிருபர் கூறுகிரு.ர்.

இனி பிரான்ஸ் முதலிய மற்ற தேசங்களில் இந்தக் கவீசுவரருக்கு நடந்த உபசாரங்களைப் பற்றிப்