பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A S A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ------- -----> ----------

களும், சக்திகளும், ஆசைகளும், முயற்சிகளும் அற்ப மாகவேயிருக்கின்றன. இங்ங்னம் வலிய வந்திருக்கும் உள்ளச் சிறுமை உயிர்ச்சேதத்திலும் பெரிய கேட்ா. கும். ஆதலால் தவறுதல் நேரிடக்கூடும் என்பதைப் பொருட்டாக்காமல் நாம் சுயராஜ்யம் பெறக் கட வோம். பாதையில் இடறுதல்களை மாத்திரம் கருதி, எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாகாது. இதுவே உண்மையான உத்திரம்.”

இந்த மறுமொழியை ஒருவன் அதிகாரிகளிடம் சோர்வில்லாமல், மீ ட் டு மீ ட் டு ம்.. சொல்லித் தொல்லைப்படுத்தினுல், அவனை அதிகாரிகள் பந்தோ பஸ்த்' பண்ணி வைக்கிரு.ர்கள். ஆனால், அவனுக்கு ஸ்வதேசத்தாரின் மதிப்பு உண்டாகிறது. ஆயின் இதே மாதிரி ஜவாப்பை ஜாதிப் புரோஹிதரிடம் சொல்லப்போய், 'ஐயரே, இது கலியுகமென்றும், மனிதனுடைய எளிய புத்தியைச் சுயேச்சைப்படி விட்டால் கெட்டுப்போகும் என்றும், ஆதலால் மூளையை உழைப்பதிலும் தலையைச் சாஸ்திரங் களுக்கு வணங்குதல்ே சிறந்ததென்றும் சொல்லு கிறீர். இந்த அவமான வார்த்தைக்கு நாங்கள் அடங்கமாட்டோம்” என்று சொன்னல், அவர் களுடைய கண் சிவந்துபோய் உட்ன்ே ஜாதியை விட்டுத் தள்ளும்படி உத்திரவு போடுகிரு.ர்கள். ராஜாங்க விஷயமானுல் வானத்தில் பறக்கும்படி யாகவும், ஜாதியாசாரமானல்-கட்டையில்-காலைக் கட்டிப் போடும்படியாகவும் இவர்கள் விரும்புகின் றனர். வலப்புறம் திருப்பவும், இடப்புறம் திருப் பவும் தோணியிலே சுக்கான் ஒன்றுதான் உண்டு. அதுபோல, மனிதன். ராஜ்ய விஷயத்திலும், ஜாதி யாசார விஷயத்திலும்-இரண்டிலும் உண்மை நில்ை பெற வேண்டுமானல், அதற்கு ஒரே வழிதான். உண்டு. இந்த விதியின் அனுசரணையிலேதான்