பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•: : ** వt معہ - ---- , ...۔

சித்பூர் ரஸ்தாவுக்கும் செளரிங்கி ரஸ்தாவிற்கும் உள்ள பேதம் தோன்றுகிறது. எல்லாம் அதிகாரி கையில் இருக்கிறது. நம்முடைய கையைக் கட்டிக் கொண்டு நடப்பதே சரி” என்கிறது சித்பூர் ரஸ்தா. செளரிங்கி ரஸ்தாவோ, எமது கைக்குள் காரியங் கள் அடங்கி நடக்காவிட்டால், நமக்குக் கையி ருந்து பயன் என்ன?’ என்று கேட்கிறது. தனது கைக்கும் தெய்வத்தின் கைக்கும் சம்பந்தம் உண். டென்று தெரிந்துகொண்டபடியால், செளரிங்கி' உலக முழுதையும் வசப்படுத்திக்கொண்டது. இந்த நம்பிக்கையை இழந்துவிட்டபடியால், சித்பூர்' உலகத்தை இழந்துவிட்டது; அரைக் கண் மூடி மவுனியாய், நிஷ்டையின்பங்களை நாடுகிறது.

கண்ணை மூடிக்கொண்டால் ஒழிய, நம்முடைய அற்புதமான ஆசாரங்களைத் தவருமல் அனுசரிப்பது ஸ்ாத்யமில்லை. கண்ணைத் திறந்தாலோ, உலக முழு வதையும் ஆளுகிற,பொதுவான லோகவிதி நமக்குத் தென்படாமல் இர்ாது. ஒரு கூட்டத்தாரேனும், ஒரு மனிதனேனும், இந்தப் பெருவிதியை வசப்படுத் தினால், அதிலிருந்து அதிகாரம், செல்வம், விடுதலை என்ற பரிசுகள் கிடைக்கும்.இந்த விதியை உறுதி யான அஸ்திவாரமாகக் கொண்டு ஐரோப்பிய நவீன நாகரிகம் நிலைபெற்றிருக்கிறது. இதில் நம்பிக்கை யிருப்பதனால், அது பெரிய விடுதலை பெற்று நிற்கிறது. நாமோகையைப் பிசைந்துகொண்டு, யஜமான் ஆக்கினைக்குக்காத்திருக்கிருேம். வீட்டிலே மூத்தவன், போலீஸ், தலையாரி, கோயில் குருக்கள் முதலியவர் களில் யாரேனும் ஒருவரைப் பூஜைபண்ணி நம் முடைய சொந்த யோசனையையும், சொந்தச் செய் கையின் திறமையையும் ஆயிரம் துரளாகஉடைத்து நான்கு பக்கத்துக் காற்றிலும் வீசி எறிந்து விடுகிருேம். - -