பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொரு கதவை அடைப்பதாகிய முயற்சியை மிகத்

தாமஸ்மாகக் கைக் கொண்டிருக்கிருர்கள். இருந் தாலும், சுகத்தை உத்தேசித்துத் தர்மத்தைக் கைவிடுதல் ஆத்மசக்திக்கு வழியில்லை என்பதை அவர்களாலேகூட மறக்கலாவதில்லை.

பிரிட்டிஷாருடைய உட்குணத்தில் நம் ஸ்வதந் திரங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த ஸ்த்தோஷ கரமான உண்மையை நமது முழு வலிமையுடன் புத்தியில் நிறுத்திக் கொண்டோமானல், அது நிறை வேறுவதற்காக, நாம் கஷ்ட நஷ்டங்களுக்கு உட் படுதல் எளிதாகும். பழைய சாத்திரப்படி அடங்கி நடப்பதைக் கைப்பிடித்தோமானல், நமக்கு மகத் தான ஆசாபங்கம் நேரிடும். இரண்டு வகைகளில் ஏற்கனவே இது வெளிப்பட்டு நிற்கிறது. ரஹஸ்யக் கூட்டத்தாரின் கொடுஞ் செயல்கள் ஒருவகை. நம்முடைய கூட்டத்து ராஜ தந்திரிகள் தர்க்கம் பண்ணுகிற வியர்த்தம் மற்ருெருவகை. "இந்த வைஸ்ராய் நல்லவரா? அந்த வைஸ்ராய் நல்லவரா? "மார்லி வந்தால் நமக்கு நிறையச் சீர்திருத்தம் கிடைக்குமா கிடைக்காதா? வீட்டுப் பூனை காட் டுக்குப் போனல், காட்டுப் பூனைபோலக் காட்டுத் தனமாய் விடுமோ, ஆய்விடாதா?

இருந்த போதிலும், நாம் மனுஷ்ய ஜாதி யினிடம் அவ நம்பிக்கை கொள்ளக் கூடாது. பிரிட்டிஷ் ராஜ்யத் திடன்டவலிமை.ஒன்று மாத்திரமே பெரியதன்று, அதன் அஸ்திவாரக் கொள்கைகள் அதனிலும் பெரியன என்பதை நாம் மனதார ஒப்புக்கொள்ளுகிருேம். அடிக்கடி இதற்கு விரோதமாக நடக்கக்கூடும். லோபம், அதிகார விருப்பம், கோபம், பயம், கர்வம் இவை எல்லாம் தொழில் செய்வதை நாம் பார்க்கலாம்' என்பது மெய்தான். மஹிமையும், தீரமும், விரோதமும்,