பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

போடும் காலம் சென்றது. இரு ட்டு மூலே குள் உட் கார்ந்து கொண்டு, நம்மை நாமே மஹான்கள்’ என்று பாவனை செய்வதில் பயனில்லை; உலகத்தாரின் சபைகளில் நம்முடைய கர்வம் சிறுமைப் படுகிறது. சக்தியீனர் போல நாம் பிறரைக் குற்றங் கூறுதல் கூடாது; பல நூற்ருண்டு செய்த பாவம் பெருஞ் சுமையாய், நமதாண்மையை நசுக்கி நம் அறிவை மயக்கிவிட்டது. அவற்றின் பெருஞ் சுமையைத் தள்ளி எறிய ஒரு பெரிய முயற்சி செய்யக் காலம் இதுவேயாம். நாம் முன்னே போகவொட்டாமல் இந்தச் சுமை பின்னே இழுக்கிறது; சென்றது வருவதை வசியவித்தை போலே கலங்கச் செய்கிறது; சென்ற காலப் புழுதியுஞ் சருகும் புதிய உதயத்தை மறைக்கின்றன; நம்முடைய புதிய இளமைத் தொழிலே அவை மூடுபனி போலே மறைக்கின்றன; நிஷபிரயோஜனம் என்ற அவமானத்திலிருந்து தப்ப விரும்பினுல், இந்தச் சுமையைக் கூசாமல் இ எறிந்துவிட வேண்டும்; மனுஷ்ய ஜாதி எப்போதும் முன்னே நோக்கிச் செல்லுகிறது; எப்போதும் விழிப் புடன் புது நிலங்களேத் தேடி மரணத்தை வெல்லு கிறது; ஜகத்தின் பெரிய சிற்பிக்கு வலக்கை போன்றது. உண்மையைக் கெஞ்சி அறிவுச் சுடர் கொளுத்திய வீதி வழியே செல்லும்பொழுது, யுகத்துக்கு யுகம் வெற்றி கொண்டு முன்னேறும் போது, உலகம் முழுவதும் எதிரொலி கேட்கத் தனி ஆரவாரம் உண்டாகிறது; இந்த மனுஷ்ய ஜாதி யுடன் நாம் சம நடையாகச் செல்ல விரும்பினல், இந்த முதுகுச் சுமையைக் கூச்சப்படாமல் வீசி எறிந்துவிட வேண்டும். ... . . "

புறத்திலிருந்து நம்மீது இடைவிடாமல் அவ மானமும் கஷ்டமும் பட்டுப்பட்டுத் தீண்டலாயிருப் பதைச் சுத்தி பண்ணித் தீர்க்கவேண்டும். தாளுக