பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AAAAAA AAAA SAS A SAS S S S S S S S S S S

சக்திக்கும், ஜாதியின் நிபந்தனைகளுக்கும் போர்

நடக்கிறது.

ஆசியாக் கண்டத்தின் மத்தியில் முன்பு மனிதர் குடியிருந்த நாட்டுக்கும், அதன்மேல் இடைவிடாமல் ஏறிக்கொண்டு வந்த பாலைவனத்து மணலுக்கும் சண்டை நடந்தது. உயிரும் அழகும் கொண்ட நாட்டை மணல் அழித்து விட்டது. அதுபோல் ஜாதி ஜனத்தை அழிக்கிறது. மனுஷ்யப் பொது இன உத்தம லக்ஷணங்களைப் பரவச் செய்தல் முக்ய மில்லை என்ற எண்ணத்திலிருந்து ஐாதியின் திறமை வளர்ப்பதாகிய கல்நெஞ்ச ஸம்ப்ரதாயம் பலமடைகிறது. ஸான்ப்ரான்ஸிஸ்கோ நகரத்தி, லிருந்து லண்டன்வரை, லண்டனிலிருந்து டோக்யோ வரை ஜாதியெண்ணம் ஆதிக்கம் பெற்றிருக்கும் நகரங்களனைத்திலும் ஒரேமாதிரியான இயல்பைக் காணலாம். அவற்றின் முகங்களைக் காட்டுவதில்லை; முகமூடிகளையே காண்பிக்கின்றன. ஜனம் ஜீவ ஞதலால் அதற்கு ஆத்மப் பிரகாசம் வேண்டும். அது ஸ்ருஷ்டி செய்யும்-கல்வி, கலை, கோயில் முதலி யன் ஜனத்தின் ஸ்ருஷ்டிகளாம். இவை ஒரே விருந்தில் பலவித உணவுகள் போலே உண்மையை அறிந்து இன்பமடைவதில் வெவ்வேறு சுவை தரு கின்றன. மனுஷ்ய லோகத்தை உயிர் வளமுடைய தாக்கிப் பலவிதங்களில் அழகு படுத்துகின்றன. ஆளுல் ஜாதிகள் ஸ்ருஷ்டி செய்வதில்லை. அவை பெருக்குகின்றன, அழிக்கின்றன; பெருக்குதலாவது சோறு துணி சேர்த்தல் போன்ற தொழில்வகை: பெருக்கும் கூட்டங்கள் அவசியமே, அழிக்குங் கூட் டங்களும் அவசியமாக இருக்கக்கூடும். ஆனல் இவை பேராசையும், விரோதமும் சேரும்போது, மனுஷ்ய ஜீவனை ஒரு மூலையில் ஒதுக்கிவிடுகின்றன, இதல்ை இசை தவறுகிறது. ஜனங்களின் சரித்