பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதி 53 தெய்வ விரோதமான இந்தக் குருட்டுக் கொள் கையைத் தைரியத்துடன் எதிர்த்துப் பேசுவோரை நியாயஸ்தலங்களில் தண்டிக்கிருக்கள் ; அல்லது கூட்டத்திலிருந்து விலக்குகிருக்கள்.

தனி மனிதன் (லோபதாப முதலிய) உணர்ச்சி களின் சமயத்திலும் யோசனை பண்ணுவதுண்டு. ஆனல் ஒரு கூட்டத்தின் உணர்ச்சியுடன் கலக்கும் போது யோசனை செய்வதில்லை. அதனுடைய தர்மப்புலன் மழுங்கிப் போகிறது. கூட்ட மனங் களில் மனிதத் தன்மையை நசுக்கிவிடுவதனால் மிகுந்த பலமுண்டாகிறது. ஏனென்ருல் கூட்ட்ப் புத்தி இயல்பில் அநாகரிகமானது. அத்ன் சக்திகள் பூத சக்திகளைப் போன்றன. இருளின் பெரிய வலியை ஜாதி தனக்குப் பயன்படுத்திக் கொள்வ தால் ஜாக்கிரதையாக இருக்கிறது.

சங்கட காலங்களில் ஒரு ஜனத்தின் தற்காப்புச் சிந்தையை ஆதிக்க முடையதாகச் செய்தல் அவசியமே. அப்போது அதன் ஒற்றுமையுணர்ச்சி கடுமையான விழிப்பெய்துகிறது. இந்த மிகை புணர்ச்சி ஜாதியில் எப்போதும் சாகாதபடி செயற்கை யுபாயங்களால் தாக்கப்படுகிறது. ஒருவ் னுடைய வீட்டைத் திருடர் வந்து கொள்ளையிடும் போது அவன் போலீஸ் சேவகனுடைய தொழிலை மேற்கொள்ள வேண்டும். ஆஞ்ல் அவனுடைய சாதாரண ஸ்திதியே அப்படியாய்விட்டால் அவ னுடைய வீட்டுச் சிந்தை மிகையாகி வீட்டருகே போவோர் வருவோர் மேலெல்லாம் பாய்ந்து விழும்படி செய்கிறது.

இந்த மிகையுணர்ச்சி ஒருவன் கர்வப்படத்தக்க உடைமையன்று. இது மெய்யாகவே ஆரோக்கியத் து க்கு லக்ஷணமன்று. அதுபோலவே ஒரு ஜாதியின்