பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜtதி 51 யென்னும் உடம்பாட்டு லக்ஷயம் ஸாதனக் குறைவு என்ற எதிர்மறையுடன் சமவேகமாகச் செல்லும் மட்டும், அவ்விரண்டுள் முழுப் பிரிவுண்டாகாதிருக்கு மட்டும் நாம் துன்பத்துக்கும் நஷ்டத்துக்கும் பயப்பட வேண்டா,

ஆதலால் முற்காலங்களில் யாதேனுமொரு ஜனம் சலகந் தொடங்கிப் பிறருடைய மனுஷ்ய உரிமையைப் பறித்துவிட முயன்றபோது சில சமயங்களில் அந்த ஜனத்துக்கு வெற்றியும் சில சமயங்களில் தோல்வியும் ஏற்பட்டது.; அவ்வளவு தான். ஆனல் இந்த ஜாதியக் கொள்கை இன்று சர்வ சம்மதமாய்த் தனது தன்னலம் அளவிலே பிரமாண்டமாக இருப்பதுகொண்டு அதை தர்ம மென்று காட்டத் தலைப்படுமிடத்தே அந்தக் கொள்கை பிறர் சொத்துக்களைக் கொள்ளையிடுவது மாத்திரமேயன்றி மனுஷ்ய ஜாதியின் உயிர் நிலை யைத் தாக்குகிறது. தர்ம விதியைப் புறக்கணிக்கும் புத்தியை மனிதருக்கு அவசரமாகவே விளைவிக் கிறது. ஏனெனில் ஜனம் தர்மவிதியை தெய்விக மாக எண்ண, ஜாதி அந்த விதியைக் காற்றிலே துாற்றி விடுகிறதெதனுல் எனில், ஜனத்தைக் காட்டி லும் ஜாதியே பெரிதென்ற கொள்கை பலவித மான தந்திரங்களால் ஜனங்களுக்குக் கற்பிக்கப் படுவதனுல் என்க. -

ஒரு நோய் மூளையைத் தாக்கும்போது அது மிகவும் கடுமையாகிறது என்று கேள்விப்படுகிருேம். ஏனென்ருல் எல்லாவிதமான வியாதி சக்திகளையும் இடைவிடாமல் முற்றுகை போடுவது மூளையேயாம். ஜாதியத் தன்னலக் கொள்கையின் உள் நிலைமை ஒரு ஜனத்திற்கு நேரிட்ட மூளை வியாதியைத் தவிர வேறில்லை. தற்காலத்து அந்த நோயின் அறிகுறி