பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறிதும் பெரிதும்

'ஜரீகப் பஞ்சத்தில் நெடுங்காலம் கஷ்டப் பட்டு பாரததேவி வானத்தை நோக்கிக் கொண்டிருந் தாள். ராஜாங்கச் சோதிடர் ஒரு பலமான ஸ்வராஜ்ய மழைக் காற்று அரபிக் கடலேக் கடந்து வந்துவிட்டதென்றும் பெரிய மழை பெய்யுமென்றும் சோதிடங் கூறினர். அப்போது பார்த்தாலோ ! பேஹாரில் மஹமதியர் மேலே ஹிந்துக்கள் கலஹ மழை தொடுத்தார்கள்-கனத்தி மழை !

பிற தேசங்களிலும் மதக் கலஹங்கள் உள. அவை லெளகிகப் போட்டியாலும் விரோதத்தாலும் ஏற்படும். நமது தேசத்திலேதான் கேவலம் மதத் துக்கே சண்டை இந்த உலகத்தில் நாமே அன்யமத ஆதரவில் சிரேஷ்டரென்று வாயிஞலே பிதற்று கிருேம். நவீன ஐரோப்பாவில் கலகங்கள் சோற்றுக் காரணமாக விளைவன. அங்கு நிலக்கரிக் கூலிக் காரரும், கப்பல் கட்டுந் துறைமுகத்து வேலைக்கார ரும், ரயில்வே கூலிக்காரரும் இடையிடையே பெரிய கலகம் பண்ணுகிருர்கள். அதிலிருந்து படிப்படியாக