பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் ஒரே ஆட்சியின் கீழிருக்கிருேம். ஒரே பொறுப்பின் கீழில்லே. எனவே, நமதொற்றுமை புறத்தோற்றம், நம்மை அது சேர்க்கவில்லை. ஒரு வரிசையாக நிறுத்தி வைத்தது. எங்கேனும் லேசாக அடி விழுந்தால் ஒருவர் மேலே ஒருவர் முட்டுகிருேம். இந்த ஐக்யம் உயிர் உடையதன்று. விழித்துக் கொண்டு ஒரே பாதையில் நடக்கும் மனிதரின் ஒற்றுமை போன்ற ஒற்றுமை. ஒரே தரையின்மீது தூங்குவோர் மாதிரி ஒற்றுமை. இந்த ஒற்றுமையில் கர்வப்பட இடமில்லை மகிழ்ச்சி கொள்ளவும் இட மில்லை. ஒன்றுகூடி ஸ்தோத்ரப் பாட்டுக்கள் பாடவும், ஒன்று கூடித் தலை குனியவும் இடங்கொடுக்கும். நம்மைத் துாக்கிவிடாது.

பழைய காலத்தில் ஜாதிக் கட்டினுல் நாம் ஸ்வஜனங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளில் தவருமவிருந்தோம். அது குறுகின களம். நாம் பிறந்த கிராமமே ஸ்வதேசமென்று நினைத்துக்கொண் டிருந்தோம். இருந்தாலும், அதன் வரம்புகளுக்குள் செல்வர் தமது செல்வப் பொறுப்பையும், புலவர் தமது புலமைக் கடமையையும் உணர்ந்திருந்தனர். ஒருவன் எவ்விதமான அதிகாரம் கொண்டிருந் தாலும், அவனைச் சூழ நின்ருேர் அதனை மாற்றுதல் இயலும். முயற்சியும், பொறுப்புமுள்ள அவ்வித வாழ்க்கையில் மனிதர் மகிழ்ச்சியுறவும், பெருமை கொள்ளவும் இடமிருந்தது.

ஆளுல் நம் பொறுப்புக்கள் ஜாதிக் கட்டிலிருந்து விலகிவிட்டன. இப்போது நமக்கு நியாயம் செலுத்து வதும் ஸர்க்கார், காப்பாற்றுவதும் சர்க்கார், வைத் தியம் செய்வதும் ஸர்க்கார், தண்டிப்பதும் ளர்க்கார்; எது ஹிந்து தர்மத்துக்கடுத்தது, எது அடுத்காதது என்பதை மேற்படி ஸ்ர்க்கார்தான் தீர்மானம் பண்ணுகிறது; நமக்கு லாகிரி வஸ்துக்கள் தயார்