பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** م و ، بند ، ما در ۱ . . . . . ." ، «»ه 8 # شا ټټي : ٤ ؛ سه ژشا تعدة من قتي "مأمم : *

செய்து கொடுக்கும் பொருட்டாகச் சாராயம் வடிக்குங் கடமையையும் அதுவே செய்கிறது. கிராமத்தான் ஒருவனைப் புலி தின்றுவிட்டால், மாஜிஸ்த்ரேட்டுக்கும், அவருடைய ஸ்நேஹிதர் களுக்கும் வேட்டைக்குப் போக லெளகர்யம் ஏற் படுத்திக் கொடுக்கிறது. நமது ஜாதிக் கட்டின் விதிகள் நம்மால் பொறுக்க முடியாதபடி பாரமாய் விட்டன என்பது மெய்யே. பிராமணன் தகதிணை வாங்கிக்கொள்ளுகிருன் ; படிப்புக் கற்றுக் கொடுப் பதை விட்டுவிட்டான் ; ஜமீன்தார் குடித்தனக் காரரைக் கசக்கிப் பிழிகிருன் ; ப்ரத்யுபகாரம் கிடையாது. மேற்குலத்தார் பொதுஜனங்களின் மதிப்பை வேண்டுகின்றனர்; அதற்குக் கைம்மாமுகக் காப்பில்லை. நமது சடங்குகள் வீண் செலவு மிகுந்தும் ஸ்நேஹ வழி குறைந்தும் வேஷமாத்ரமாயின. இடையே ஜாதி முட்டுதல் பல. கு ரு க் க ளி ன் கொள்ளை தீவிரம். ஜாதிப் பசுவுக்கு நாம் தீவனம் போடுகிருேம். அது நமக்குப் பால் கொடுப்பதை நிறுத்தி முட்டுவதை நிறுத்தவில்லே.

நம்மவர் முன்பு நாடு நடத்திய திறமையைக் காட்டிலும் வெளியார் நடத்தும் நாடு செவ்விதர் அன்ரு என்பது விசாரணையன்று. மனிதர்கள் மரங் கல்லாக இருந்தால் அடக்கி வைப்பதே சிறந்த தொழில். ஆனல் மனிதர் ஜீவ ஜந்துக்கள். உயிரும், விருத்தியும், முன்னேற்றமும் நாடுவோர் தேசக் காரியங்களினின்று பிரித்து நம்மவரை மனமேங்க விடுதல் குரூரம் தந்திரத்துக்கு விரோதம்.

நாம் அதிகாரம் கேட்டது தற்புகழ்ச்சிக்கன்று: பிறன்ரத் துன்புறுத்த அன்று. பிறர் செல்வத்தைப் பறிக்க அன்று. பெருந் தொகையான ஜனங்களைக் கொல்லப் பெருமடங்கான சக்தி ஸ்ம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கத்தாலன்று. ஸமாதான