பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறிதும் பெரிதும் . &

ஆனல் வெள்ளத்திலும், பஞ்சத்திலும் ஜனங்க ளுக்குதவி செய்ய இடமிருப்பது க்ொண்டே மனுஷ்ய ஹ்ருதயத்தின் நீள்ளுவித இச்சைகளும் திருப்தி யடைந்துவிடமாட்டள். நாடோறும் மனித வாழ்க் கையில் சேரும் எல்லாவிதத் தொழில்களும் செய்ய இடங்கொடுத்தால்தான் திருப்தி பெறும். இல்லா விட்டால் அந்த இச்சைகள் நெஞ்சுக்குள்ளேயே அழுகி விஷமுடையனவாய் தேசத்தைத் துயர்ப்படுத் தும் ரஹஸ்ய யத்தனங்களாகின்றன. ஆதலால் ஆதர்சத்தை அனுபவமாக்க விரும்புவோரின்மீதே ஸ்ர்க்காரின் ஸ்ம்சயம் மிகத் தீவிரமாகச் செல்லு, கிறது. தன்னலமே வேண்டுவோர், தருமங் கருதா தார், சோம்பேறிகள், உதாளபீனக்காரர், இவர்களுக் குத்தான் இப்போது நடைபெறும் ரஹஸ்யப் போலீஸ் தர்பாரில் பயம் குறைவு. இவர்களே பிறருக்குழைக்கப் போனுல் அ த ற் கு முகாந்தரம் காட்டுதல் மிகவும் சிரமமாய்விடுகிறது. அதிகாரிகள் பெரிய தோரனையுடன், நீங்களேன் பெரிய காரியங் களில் தலையிடுறிர்கள் : தின்னவும், குடிக்கவும், கூடி வேலை செய்து கூலிக்குத் தக்கபடி லெளக்யமாகக் குடியிருக்கவும் இ - ம் கொடுத்திருக்கிறபோது அதோடு திருப்தியடையாமல் ஆகாச வேட்டைக் கேன் புறப்படுகிறீர்கள் ? என்று நம்மை நோக்கிக் கேட்கையில் நாம் என்ன உத்தரம் கூறுவோம் ? ஆனல், அவர்கள் என்ன சொல்லியபோதிலும், விசாரணையில்லாமல் மனிதரை புந்தோபஸ்த்” பண்ணும் இருட்டுக்குகைத் தந்திரத்தில் ஒளியில்லை; நீதியில்லை : சத்தியமில்லே அதிலிருந்து திப்பு வழியு மில்லை. அதனை கவர்ன்மெண்டார் அனுஸ்ரிப்பது நியாயமில்லை. தேசத்தில் மிகச் சிறந்த யத்தனத்தை யெல்லாம் இப்படி விசாரணையில்லாமல் மண்ணுக் குள்ளே புதைத்தல் எளிதாம். அவற்றினின்றெழக் கூடிய பிசாசுகளைத் துரங்கப் பண்ணுதல் கஷ்ட்ம்.