பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! به هر سه سیم؛ مل

S AS AA AAAA AAAA AAAA AAAAeT AeeT TTTT TaATTT மதியுடைமையன்று.

இந்தக் குகைத் தந்திரம் இங்கு மும்முரமாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகையிலே, இங்கிலாந்தி விருந்து செய்தி வருவதைப் பார்த்தால் ஸ்வராஜ்யம் கொடுக்க மசோதா செய்ய யோசித்திருப்பதாகத் தெரிகிறது. தொல்லைப் பேயைத் தொலைக்கக் கொடுமை வழி நேர்மையன்று. ஜனங்களை நலம் செய்யவேண்டுமென்பதையும் அதிகாரிகள் காணத் தொடங்கிவிட்டார்களென்று நம்புகிறேன். நான் இதில் பிறந்த காரணத்தால் மாத்திரமேயன்றி, எனது யத்தனங்களும், ஜயங்களும், இதற்கே ஸ்மர்ப்பணம் செய்யத் தகுந்தன. ஆதலாலும் இது என் தேசம்’ என்று ஜனங்களில் ஒவ்வொருவனும் தெரிந்து கொள்ளும்படி அதிகாரிகள் உதவி புரிந் தால் மாத்திரமே ப்ரிடிஷ் ஸாம்ராஜ்யம் இந்தியா வில் நிலைபெறும். இத்தனை பெரிய தேசத்து ஜனங் களை பல ஹீனராகவும், சக்திஹlனராகவும், ராஜ்ய விஷயத்தில் சிரத்தாஹீனராகவும் வைத்திருந்தால், ஆபத்துக் காலத்தில் இவர்களால் உதவி பெற இட மில்லாது போய்விடும்.-- அவர்களுடைய ஜடத் தன்மையின் பாரம் பொறுக்க முடியாததாய்விடும். மேலும், மிகவும் பலஹீனமாக இருப்போரையும் நமக்கெப்போதும் எதிர் ஸ்தானத்தில் வைப்பது தோணியடியில் சிறு தொளை போலாம். காற்று சரியாக இருக்கும்வரை ஜலத்தை இறைத்திறைத்து விட்டுத் தோணியைச் செலுத்தலாம். ஆனல் புயற் காற்றில் எல்லாரும் தண்டையும் சுக்கானையும் பாயையும் கவனித்துக் கொண்டிருக்கையில் சிறிய தொளை பெருங்கேடாம். . அப்போது கோபங் கொண்டு மேற்படி தொளையைப் போலீஸ் சட்டத் தடி-அல்லது சட்டமில்லாத் தடி-கொண்டு புடைப் பதில் லாபமில்லை. சிறு செலவுக்கு பயந்து சரியான