பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" : عربي بيج جد سيسر . ب مع : به يوم ، مراسم : بع \...%.* "سبب" --

ஒ க க் க வேண்டுமானுல் :- இன்னனுடைய தலையைக் கொண்டு வா’ என்று சொல்லி விடுவார் கள். ஆளுல் சிரமமான முடிச்சை அறுப்பதைக் காட்டிலும் அவிழ்ப்பது நல்லதென்றும் அறுப்பதில் கஷ்டங்களுண்டாகுமென்றும் தான் கண்டுபிடித் திருப்பதாக ஐரோப்பா தற்புகழ்ச்சி பேசிக்கொள்ளு கிறது. தொல்லையும் கலகமுமாக இருக்கும் காலங் களிலும் நாகரிகமானது செலுத்தவேண்டிய கடமை கள் உள. அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது. எல்லாவிதமான தண்டனையிலும் மிருகத்தனம் இருக் கத்தான் செய்கிறது. அதை நாகரிக ஜனக் கூட் டத்தில் கையாளுமுன்னே, சட்டம் என்ற சல்லடை யர்ல் வடிகட்டி எல்லாவிதமான கோபம், பகைமை, பகடிபாதம் இல்லாதபடி செய்தல் மரபு. இல்லா விட்டால் நியாயாதிபதியின் கோலுக்கும் திருடன் தடிக்கும் சரியானபடி வேற்றுமை தெரியாமல் போய் விடும். இந்தக் காலம் சிரமமான காலமென்பதை நான் அங்கீகரிக்கிறேன்: தேசம் அபிவிருத்தியாவதில் ஏற்படும் தடைகளை நீக்க நமது வாலிபரில் சிலர் அனுஷ்டிக்கும் முறைமை நமக்கு வெட்கந்தருகிறது. மேற்குத் திசையாரிடமிருந்தே நியாயத்தையும் லெளகர்யத்தையும் பிரிக்கும் வழி நாம் கற்றுக் கொண்டோம். ஆதலால் மேற்படி காரியத்தில் அதிக வெட்கப்படுகிருேம். ராஜ்ய தந்திரத்தின் பஹிரங்கப் பொய்களும், ரஹஸ்யப் பொய்களும், பஹிரங்கக் கொள்ளைகளும், ரஹஸ்யக் கொள்ளை களும் பொன்னில் மாற்றுக் கலப்பதுபோலே பொன் னுக்குப் பலமென்று மேற்குத் திசையார் கருது கின்றனர். ஆதலால் தேச பக்தியின் ஸ்வார்த்தம் ஒரு வழி காட்டும்போது, தர்மம் வந்து அதைத் தடுத்துத் தொந்தரவு செய்ய இடங்கொடுத்தல் மடமை யென்றும் பலஹீனத்துக்கு அடையான மென்றும் நமக்குக் கற்றுக் கொடுத்தனர். மேலும்