பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறிதும் பெரிதும் 鳄

படுத்தும் சக்தி நமக்கு பாசகத்திலும், இரவவிலும் கிடைக்காது. நம் உள்ளே நிற்கும் தர்ம சக்தியே அதனை நிறைவேற்றுவதாகுக. அந்த சக்தி அநந்த மான துக்கத்தையும் சிரமத்தையும் பொறுப்பது, தன்னைப் பலியிட்டுத் தான் துயரப்படும் சக்தியை விலங்குகளாலே கட்டி வைக்கும் சக்தி உலகத்தில் எதுவுமில்லை. அது தோல்வியில் வெல்லும், மரணத் தில் அமரத்தன்மை பெறும்.

- பிற் குறிப்பு

மேற்படி உபந்யாஸ்த்தை நான் வாசித்த பிறகு லார்டு ரோனல்ட்ஷே (வங்காளத்து கவர்னர்) தமது சபையில் செய்த ப்ரஸங்கமொன்றில் நான் இங்கி லாந்தில் ஒரு நண்பருக்கெழுதிய கடிதத்தைப் பற்றிப் பேசி யிருக்கிருர், அத் கடிதத்திலேனும், இந்த உபந்யாலத்திலேனும் இந்தியா பாதுகாப்புச் சட்டத் தின் கீழே தண்டனைப்பட்டவர்களுடைய குற்றம் குற்றமின்மையைப் பற்றி எவ்விதமான அபிப்பிராய மும் சொல்லவேண்டுமென்பது என்னுடைய நோக்க மன்று. நான் சொல்ல விரும்புவது யாதெனில் : ரஹஸ்யமாகக் குற்றஞ் சார்த்தி ரஹஸ்யமாக தண்டனே புரிதலாகிய இதுவரை அனுஷ்டானத்தில் நடந்துவரும் உபாயம்ானது தண்டனைப்பட்டவர் களில் பலர் குற்றமில்லாதவரென்று நினைக்கும்படி என் தேசத்தாரில் பலரைத் தூண்டுகிறது. சிறைச் சாலைகளில், தனியறைகளில் அடைத்து வைக்கும் வழி முன் ஜாக்ரதையென்று பொது ஜனங்களின் மனதில் படவில்லை. பழி வாங்குவது போல் தோன்று கிறது. மேலும் பந்தோபஸ்திலிருந்தவன் விடுதல் யடைந்த பிறகும் அவனை ஓயாமல் போலீஸார் பின் தொடரும் கொடுமையைக் கொடுமையென்று அதிகாரிகள் ஒப்புக்கொள்ளாவிடினும், கஷ்டப்படு

7