பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

ஓடி வந்தது. நல்லது, மேதையே, தொடர்ந்து செய், இங்கு தான் வாடை தட்டியது. உன் பெரியதன மூக்குக்கு நேராகத் தான் காற்று வீசுகிறது. உன் தீனிக்கு உரிய உழைப்பைச் செலுத்து ‘ என்று பிராங்க் லேண்டியிடம் கூறியது. - - உடனே உயர்ந்தது. அந்தத் தலை. பின்னர் நான் கண்ட சிலை, மங்கை, ஒவியம் எதையும் விட அக் காட்சி மிக அழகாக இருந்தது என்பது என் ஞாபகம். குன்றின் மேலே ஓடியது நாய். பிராங்க் நெடுகிலும் பார்த்து, என்னை அழைத்தது. நாங்கள் இரு வரும் குன்றின் மீது நடந்தோம். இருநூறு கஜ தூரத்துக்கு அப் பால் ைேண்டி, தூரப்பார்வைக்கு ஆவி போல் வெளிறிப் போய், பைன் புதர் ஒன்றின் ஒரத்தில் சலவைக் கல் சிலையாய் நின்றது.

நான் சுட்ட போது ஒரு பறவை மரத்தைச் சுற்றித் தாழ்ந்து: ஒடியது. மறுமுறை சுடுகையில் இன்னொரு பறவை ஒரு கிளைக்கு மேலாகப் பாய்ந்து சென்றது. இறைச்சி கிட்டவில்லை. நாய்கள் வருத்தமாய்த் தென்பட்டன. இந்தப் பையன் சுத்த ரெண்டும் கெட்டான் தான். ஒரு கணம் வெற்றிகரமாக வ்ெடி தீர்க்கிருன். அடுத்த கணத்தில் மக்கு ஆகிவிடுகிருன். நாம் அவனுடைய தன்னம்பிக்கையைச் சற்று உறுதிப்படுத்துவது நல்லது ‘ என்று பிராங்க் துயருடன் கூறியது. லேண்டி வெறுமனே தோளை குலுக்கிக் கொடுத்தது. அதை என்னுல் செய்ய முடியாது ‘ என்று அது வெகு தெளிவாகச் சொல்லிவிட்டு, தன் வயிற்றின் மீதுள்ள எதையோ ஆராய்வதற்காகக் கீழே படுத்தது.

பொதுவான ஆமோதிப்பின்படி-இதில் நான் சேர்க்கப் படவில்லே-பறவைகள் சதுப்பு நிலத்தின் ஊடே பறந்து, ஒரு பக்கத்தில் உள்ள சரிவுக்குச் சென்று விட்டன. அந்தச் சரிவு மரங்கள் அடர்ந்த பகுதிதான். நாங்கள் சதுப்பில் புகுந்தோம். அதைக் கடக்கும்போது, ஒரு ஓரத்தில் ஒற்றைப் பறவை ஒன்று மேலே எழுந்தது. அதை நேர்க்கி நான் சுட்டேன். மேலும் இரண்டு கிளம்பின. எனினும் ஒன்றுகூட அடிபட்டு விழவில்லை. கிளைகளினூடாக அவற்றைப் பர்ர்ப்பது அரிதுதான். பிராங்க் சற்றே யோசித்தது. பறவைகள் இருக்குமிடத்தைச் சுற்றி என்ன அழைத்துச் சென்றது. குன்றின்மீது என்னை நிற்கவைத்தது. நான் அதைப் பின்தொடர்ந்து கீழே இறங்க முயலவும், வேண்டாம், பையா ! உனக்கு வேலையை எளிதாக்கவே நான் முயற்சி செய்கிறேன் என்றது.

நான் சரிவின் மேல் நின்றேன். பிராங்க் லேண்டியை சதுப்புக்குள் அனுப்பியது. தானும் சரிவில் இறங்கி சதுப்பு நோக்கிச் சென்றது. எந்த நாயும் குறியைக் காட்டவில்லை, அெைl பறவைகளைக் கண்டன. அவற்றைக் கலைத்தன. பறவைகள் கலந்து வெட்டவெளியில் எழவும் நல்ல குறிகளாக அமைந்தன. சிறிது நேரத்திலேயே மேலும் நான்கு ப்ற்வைகள் என் பையை அடைந்தன. - - -