பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிய நாயும் முதிய மனிதனும்

நாங்கள் அம்மாவைச் சந்திக்க வேண்டிய இடம் நோக்கி நடிக்கலாளுேம். வேறொரு மரத்துரள் குவியலே வேண்டி கண்டு, அதனருகே சென்றது. இம்முறை பறவைகள் மூன்றடி உயரமுள்ள மினும்னு பெர்ரிச் செடிகளின் கும்பலில் காணப்பட்டன. கொலைதான். இதற்குள்ளாக நாய் க ள் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை ஊட்டியிருந்ததால், நான் சாதாரணமாகத் துப்பாக்கியை உயர்த்தி, தேர்ந்த வேட்டைக்காரனைப் போல் சர்வ நிச்சயத்தோடு இருமுறை சுட்டேன். வேண்டி தன் பின்புறத்தை-அதன் ஒரு பகுதி எங்கோ தவறிவிட்டது போல் தோன்றியது-ஆராய உட்கார்ந்தது. பிராங்க் போய், பறவைகளே எடுத்து வந்து என் பையில் திணித்தது. அது தலை நிமிர்ந்து பார்த்து, வாய்திறவாத சிறுவனன நான் கட்டளைகளுக்கு நன்கு கீழ்ப்படிகிறேன் என்றும், இனிமேல் வீடு திரும்பலாம் என்றுக் கூறியது. .

துடைப்பப் புல் நிறைந்த வயலில் பறவைகள் முகாமிட்ட இடத்தை நான் ஏக்கத்தோடு கவனித்தேன். . . .

‘ கூடாது. எல்லையை நினைவுபடுத்து. தாத்தா இதை விரும்பமாட்டார்’ என்று இரண்டு நாய்களும் கூறின. சரிதான், அம்மாவைக் காணச் செல்வோம்’ என்றேன். நாங்கள் நடந்த பிரதேசத்தில் மற்றும் மூன்று பறவைக் கூட்டங்கள் தென்பட்டன; ஆயினும் நாய்கள் வேட்டையாடுவதற்கென்று ஒரு அடி கூட எடுத்துவைக்கவில்லை. நேரே வழியோடு ஓடின.

நாங்கள் வீடு திரும்பியபோது, தாத்தா முன்போல் சாவை அணுகியிருக்கவில்லை என்றே தோன்றியது. ஏனென்ரில், அவர் குளிரை விரட்டுவதற்காக எப்பொழுதும் பருகும் மருந்தின் வாடை லேசாக நிலவியதை நான் கண்டு கொண்டேன். அது கரிப்பிடித்த பீப்பாய்களில் வரும். ஒரு விதமான செந்நிறம் பெற்றிருக்கும். அந்தக் காலத்தில் அது சட்ட விரோதமானது. நெருப்பின் முன்னுல் நான் பத்துப் பறவைகளையும்-ஆறு ஆ ன் க ள், நான் கு பேட்டைகள்-பரப்பியதும், அவர் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்ததாகத் தோன்றியது.

ஏதாவது கற்றாயா? “ என்று அவர், புகைக் குழாயை: உறிஞ்சியவாறே, எதேச்சையாய் கேட்டார்.

ஆமாம். நான் அறிந்துகொண்ட ஒரு விஷயம் இது : மழைக்குப் பிறகு நாம் மேட்டு நிலத்தில் தான் வேட்டையாட, வேண்டும். ஏனெனில் காடைகள் தங்கள் கால்களை ஈரமாக்க விரும்புவதில்லை. மேலும், வருஷத்தின் இந்தப் பருவத்தில் அவை தின்பதற்கேற்ற எதுவும் வயல்களில் கிடைக்காது. ஆகவே அவை மரச்சிதைவுகளையும் பெர்ரிகளில் மிச்சமானவற்றையும் தின்று கொண்டு, காட்டில் வசிக்கின்றன. அவை மரத்துTள் கு வியல் களை வி ரு ம் புவதாக வும் தெரிகிறது ‘ என்று. சொன்னேன். -