பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிய நாயும் முதிய மனிதனும் 1.

பின்புறத் தோட்டத்தில் பழக்கலாம். அதற்கு மோப்பம் பிடிக்கக் கற்றுக் கொடுக்கும் முறை இவ்வுலகில் ஒன்றுமேயில்லை. ஆகவே நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. ப்றவை சம்பந்தமான உணர்வை அதற்குக் கற்றுக் கொடுக்கும் வழி ஒன்று கூட இந்த உலகத்தில் இல்லை. எனவே அது பற்றிக் கவலை கொள்வதில் பயனில்லை. நீ இந்த நாய்க்குக் கற்பிக்கக் கூடியதெல்லாம் சிறிது ஒழுக்கமே யாகும். அதன் மூலம் இந்த நாய் தன் திறமை அனைத்தையும் அப்புறம் லாபகரமாகப் பயன்படுத்த முடியும். பள்ளிக்கூடத்தில் உனக்கு ஒழுக்கம் பயிற்றுவிக்கிறார்களே, அது மாதிரித்தான். அதல்ை_நீ பயனடைவதற்குப் போதுமான மூளை உனக்கு இருக் கிறதா இல்லையா என்பது உன்னைப் பொறுத்த விஷயம்.’ .

எங்கே துவங்க வேண்டும் ?’ என்று நான் கேட்டேன். நாயைப் பழக்குவதற்கு-முறியடிக்க அல்ல-பல ரகமான வழிகளும் உண்டு. முறியடிப்பது என்ற வார்த்தையை நான் உன்னிடமிருந்து கேட்க விரும்பவில்லை. முறிந்து போன நாய் நமக்குத் தேவையில்லை. நீ நாய்க்குப் பயிற்சி அளிக்க விரும்பு கிருயே தவிர, அதை நசுக்கிவிட அல்ல. ஒரு நாயைச் சிதைவுறச் செய்பவன், அந்த நாயை அடைவதற்குத் தகுதி இல்லாதவனே. நீ அதற்குக் கற்றுத்தர வேண்டியதெல்லாம், கொஞ்சம் பகுத் தறிவும் சிறிது விநயமும் தான். ஆம், இல்லை என்பவற்றுக்குள்ள வித்தியாசத்தையே நாம் அதற்கு முதலாவதாகக் கற்பிக்க வேண்டும். ஆதாரமான எதிலிருந்தாவது நாம் பயிற்சியைத் துவக்குவோம்...... உணவையே கவனிக்கலாம் ‘ என்றார், 3. நாய்களுக்கு நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் தீனி கொடுத்தோம். எனவே அவை அதிகப் பசியோடிருக்கும். சாப் பிட்டு மிஞ்சியவற்றையும், குளிர்ந்த வெள்ளைச் சோளம், தானிய ரொட்டி, டர்னிப் கிழங்கின் தழைகள், இறைச்சித் துண்டு, முதவி யவைகளையும் அவற்றுக்கு அளித்தோம். அவ்வப்போது டப்பியில் அடைத்து வரும் ஸ்ால்மன் அல்லது நாய் உணவு எதையாவது கொடுப்பதும் உண்டு. ஆனால் அதிகமாக அல்ல. பிற்பகல் ஐந்து மணி சுமாருக்குத் தீனி வைப்போம். ஒவ்வொரு நாய்க்கும் தனித் தனியாகத் தகரத் தட்டு உண்டு. தாத்தா விரல்களைச் சொடுக்கும் வரை, பிராங்கும் லேண்டியும் தட்டுகளை நோக்கிச் செல்லாமல் நிற்பதை நான் கவனித்திருக்கிறேன். அவை தின்னும் போது, நடுவே அவர் நில்லு !’ என்று கத்தினால், அவை சாப்பிடாமல் நின்று விடும். பிராங்க் மிகவும் சாமர்த்தியமானது. ஒரு இறைச்சித் துண்டை அல்லது சுவை மிகுந்த உணவுப் பொருள் எதையோ அதன் மூக்கின் மேல் வைத்தால், அது சும்மா உட்கார்ந் திருக்கும். நாம் உத்தரவிட்டதும், அது தலையை உதறி, இறைச் சியை ஆகாயத்தில் எறிந்து, கவ்விப் பிடித்து, விழுங்கி விட்டு, தலை வணங்குவது போல் பாவிக்கும். -

நாங்கள் நாய்க் குட்டியை வெகு சுலபமாகப் பழக்கினுேம்.