பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவானேக் கணவானே காண்டார்

பறவைக் கூட்டத்தின் ந டு வே ஓடுகிறபோதும் நாய்க்கு அது தெரியும். அப்படிச் செய்வது தவறு என்று தெரிந்துகொண்டே அது இறந்த பறவையை அழுத்திக் கடிக்கிறபோதும் அதற்கு உதை தேவைப்படுகிறது. நாயைத் தவருக மதிப்பிடாதே. கூரிய மோப்ப சக்தியும் நல்லுணர்வும் பெற்றி உயர்ந்த ஜாதி நாயைத் தவறு செய்யும்படி விட்டால், அது உன் குற்றமேயாகும்,

எப்படியோ காடை விஷயத்திலிருந்து விலகிப்போய் விட்ட தாகத் தாத்தா சொன்ஞர். வயதானவர்கூட பரபரப்பு அடை யக்கூடும் என்பதை அவர் விளக்கும் விதம்தான் இது. மீண்டும் அவர் பழைய விஷயத்துக்கு வந்தார். அறிவுள்ள எவனும் காடைக் கூட்டத்தை அது விருப்பமுடன் வாழ்ந்துவரும் இடத் திலிருந்து அகற்றவே மாட்டான் என்று அவர் சொன்ஞர்.

காடை நம் குடும்பத்தின் ஓர் அங்கமாகும் என்று தாத்தா திரும்பவும் கூறினர். குடும்பத்தைச் சேர்ந்த இதர அங்கத்தினர் போலவே அதுவும் போஷிப்பை எதிர்பார்க்கிறது. ஆகவே அதற்காக வயலில் பட்டாணி, கடலே அல்லது வேறு எதையாவிலு: பயிரிட்டு, பறவை தின்பதற்கென்றே விட்டுவிட வேண்டும். காடை பறந்து சென்று பதுங்குவதற்கு வசதியாக அதை அருகி லேயே பயிரிடவேண்டும். சின்னக் காடை தன் பழக்கங்களில் நன்கு ஊறியது. உறங்கும் இடத்திலிருந்து அது வெகு தூரம் போகும். ஆயினும் வீட்டுக்கு ஓடிவரவே அது ஆசைப்படுகிறது. மனித இனம் இதிலிருந்து ஒரு பாடம் படிக்க மறுப்பது அவமா னமதான. - * -

ஆளுல் மனிதரிடையே உள்ளது போலவே, காடையிடமும் மடத்தனம் ஒன்று உண்டு. நன்னிலையை அது நீடிக்க விடுவ தில்லை, சண்டையைத் துவக்கும். நம்மைப்போலவே அதுவும் தன்னைத்தானே செயலற்றதாக்கிக் கொள்ளும். அறியாமையில்ை தான் யுத்தங்களும் பஞ்சமும் ஏற்படுகின்றன. வேட்டை விதிகள் கூடப் பிறந்துள்ளன. இவ்விதிகள்பேரில் எனக்கு நல்ல அபிப் பிராயம்தான். ஏனெனில் அவை மனிதரையும் பறவைகளையும் எச்சரிக்கையாக இருக்கும்படி செய்கின்றன. உறுதியான இல் லோம்பும் முறைகளை அதன்மீது சுமத்தாவிடில், காடை தன் குடும்பத்தில் கலகம் விளைவிக்கும்; தன் இன்பத்தில் ஆழ்ந்து, முடிவில் தன்னையே அழித்துவிடும். ஆண் பறவைகள் சண்டை. யிடும். பெண் பறவைகள் தம் முட்டைகளைத் தாமே தின்றுவிடும். பறவைகள் வசித்த இடத்தில் திடீரென்று எதுவுமே இல்லாது போகும். -

இது யாருக்குமே நல்லதல்ல. பறவைகள், பூச்சிகள், நீ. நாய்-யாருமே நன்மை பெறப் போவதில்லை. எனவே ஆண்டு தோறும் அதைக் கணிசமான ஒரு அளவுக்குக் குறையும்படி சுட வேண்டும். இருபது பறவைகள் கொண்ட ஒரு கூட்டம் இருப்பு தாக வைத்துக்கொள். நீ அதைச் சுட்டு, பாதியாகக் குறைக்