பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தத்தில் குதிரை வெறி if &

எந்த நாளில் வேண்டுமாயினும் ஊரை விட்டுக் கிளம்பித் தன்னந்: தனியணுய் அற்புத யாத்திரையில் ஈடுபடுவதற்கு வசதியான இடம் அது. இந்த அனுபவத்தின் முடிவில் வயிற்றுவலி ஏற்படுவது வழக்கம். எனினும், ஒருவன் தன் பெற்றாே ரிடமிருந்து விடுதலே பெறவும், சிற்றுண்டிப் பெட்டியைச் சும்க்காமலே திரியவும் வாய்ப்புக் கிட்டும். - -

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஏகதேசம் ஒரு டார்லானகவே விளங்கினேன். என்னைப் பிடித்து வைத்திருக்கக் கூடிய வீடு எதுவும் இருந்ததில்லை. குரங்கு மாதிரி மரங்களில் தொத்தித் iந்தேன். மாசத்துக்கு ஒரு தடவை எதையாவது பாழ்படுத் தினேன். காட்டுச் செர்ரி மரம் ஒன்றின் உயரே, கிளைகளிலே ஒரு மர வீடு அமைத்தேன். ஒன்றுக்கொன்று தொடர்புள்ள குகைகள் பல அமைத்து, அந்த வட்டாரத்தை நிலைகுலையச் செய்தேன். பள்ளிக்கூடத்தில் என் அபிவிருத்தி படுமோசமாக இருந்தது. ஏனெனில், கடைசி மணி எப்பொழுது அடிக்கும், நாம் எப்போது: புதரினுள் சுற்றலாம் என்று நேரத்தைக் கணக்கிட்டபடி இருப்பது தான் என் வழக்கம். பள்ளியின் அருகே வசதியான நீரோடை ஒன்று உண்டு. இடைவேளையின் போது நாங்கள் அதில் இறங்கி அம்மணமாக நீச்சலடிப்போம். ஒருநாள் உபாத்தியாயர் திடுமென வந்து எங்களை எல்லாம் திகைக்கவைத்து, எங்கள் பெற்றாேருக்கு மோசமான கடிதங்கள் எழுதிவிட்டார். நான் யார் என்பதை அன்று யான் அறிந்தேன்iல்லை. டாம் லாயர், ஹக்ஃபின், டார்ஸ்ான், டேனியல் பூன், பஃபலோபில், மற்றும் எர்னஸ்ட் தாம்ஸன் nட்டனின் கதாநாயகர்கள் பலரும் கலந்த ஒரு பிறவி யாகவே நான் விளங்கினேன்.

சொறி சிரங்கு, ஐவி விஷம், மீன் முட்களால் ஏற்படும் பலரகக் காயங்கள் எல்லாம் எனக்கு வந்தன. ஜெல்லி மீன் தண்ணிரில் என்னைக் கடித்தது. பள்ளிக்கூடத்துக்கு நான் அடிக்கடி மட்டம் போட்டேன். அதனல் மோசமான அறிக்கைகள் எனக்குக் கிட்டின. கள்ளத்தனமாக நான் புகைபிடிப்பதை அம்மா கண்டுவிட்டாள். அதுபற்றிக் காரமான பேச்சு நிகழ்ந்தது. 676 தோழர்களில் அநேகர் மீனவரே யாவர். நான் பேசிய மொழி அனைவருக்கும் அதிர்ச்சி தந்தது. எங்காவது ஒடிப்போய், சிவப்பு இந்தியர்களோடு சேர்ந்துவிட நான் நினைத்தேன். அப்பொழுது ஒரு நாள் தாத்தா ஒரு புருவத்தை உயர்த்தி என்னைக் கேலியாகப் பார்த்து, ஏய் ! என்றார்.

என்னய்யா? என்றேன். ‘'நீ கொஞ்சம் அடக்கம்ாக இருப்பதற்கு உரிய காலம் வந்து விட்டது, சின்ன்ப் ப்ையா. சண்ன்ட் போட வழியின்றித் திரிகிற முரட்டு இந்தியன் மாதிரி நீயும் இருக்கிறாய். இது வசந்தகாலம்: வசந்தத்தில் எல்லாக் குதிரைக் குட்டிகளும் வ்ெறியுடன் அலேயும் என்பது எனக்குத் தெரியும். ஆயினும் உன்னைச் சாந்தப்படுத்தில்

8