பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

த்ரி இயலும் என்பதையும் நான் கற்றறிந்தேன். நான் அதி இாலேயிலேயே எழுந்து, மணல் திட்டுகளில் ஒன்றை நோக்கிப் படகைச் செலுத்துவேன். அங்கு மணலில் ஒரு துடுப்பை ஆழ காகப் பதித்து, அதில் படகைக் கட்டுவேன். பிறகு சேற்றில் காலால் அளேந்து, மட்டிச் சிப்பிகள் அல்லது மெல்லிய ஒடு பெற்ற தண்டுகள் அகப்படுகின்றனவா என்று தேடுவேன். இப்பிகள் திறையக் கிடைத்ததும், வீச்சு வலையை எடுத்து, துண்டில் இரைக் காக முல்லட் மீனும் இருல் மீனும் பிடிக்க ஆழமில்லாத நீரில் வீசுவேன். பெரிய் வட்டமாய் விரித்து வீழும் வலை படியும்போது தண்ணீரைக் கூரிய கம்பிகளாக மேலெழச் செய்யும். வலேக் கயிறு களுக்குள் முல்லட்டும் இருல்களும் துள்ளித் துடித்து நெளியும்.

சிறந்த வளைகள் எங்கே உள்ளன-பெரிய கறுப்பு மீன் எங்கு வசிக்கும், பலவீனமான மீன் எங்கு தொங்கும், முள்முதுகுப் பெர்ச் எங்கு அகப்படும் என்பதை எல்லாம் நான் காலப்போக்கில், ஆராய்ச்சி மூலம் அறிந்துகொண்டேன். சில சமயம் நான் படகைக் கால்வாயில் செலுத்தி, சிறு நீலமீன்களோடு விளையாடி மகிழ்வேன். பிறகு, படகை பாலத்தடியில் உள்ள, நத்தைக் கடுகன் அப்பிய கம்பங்களில் பிணேத்துவிட்டு, அமைதியாக மீன் பிடிப்பேன். அங்கு கருங்கல் நண்டுகளும் உண்டு. கருமையும் மஞ்சளும் கலந்த பெரிய நண்டுகளில் ஒன்றைப் பிடிப்பது பெரும் விசேஷமேயாகும். அதன் கொடுக்குகள் முழுவதும் வெண் இறைச்சியே தான் ; அதற்கு உடல்ே இல்லை என்று சொல்ல }, -

ஆளுல் அற்புத அனுபவம் இரவில்தான் நிகழும். மீன் பிடிப் போர் உபயோகிக்கும் விளக்கைக் கட்டிக்கொண்டு, படகை நீரில் மெதுவாக அசையவிட்டு, ஆடும் மஞ்சள் ஒளியிலே தட்டை மீன் கனின் நிழல் தென்படுகிறதா என்று கவனிப்பேன். மூன்று கூர் முட்கள் உடைய எறியீட்டியால் தட்டை மீனக் குத்தி அழுத்து வேன். அதைப் பட்கினுள் இழுக்கும்போது அது பலமாக விந்து விழும். இரவில் நல்ல வேட்ட்ை கிட்டியிருந்தால், தட்டை மீன் கனே நான் விற்பது வழக்கம். அதன் மூல்ம் எனக்கு நிறையக் காசுகள்-சிலசமயம் முழுசாக ஒரு டாலர்கூட-கிடைக்கும்.

படகில் வெளியே சிற்றுவதில் ஏற்படும் சிறப்புகளில் முக்கிய மானது நானே பிடித்த உண்வுப் பொருள்களைத் தின்று மகிழ்வது தான். ஒரு சிறு மணல் திட்டு, அல்லது கூந்தல் பனை நிறைந்த தீவில் படகைச் சேர்ப்பேன். உப்பு, மிளகு, சிறு கொப்பரை முதலியன படகிலேயே இருக்கும். விறகு தாராளமாய் அகப் படும். சிற்றுண்டிச்சாலைகளில் ஜனங்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் பொருள்களே எல்லாம் நான் அன்று இலவசமாக உண்டு தனித்தேன் என்பது இன்று எனக்குப் புரிகிறது. புதிய இப்பிகள், சிப்பிப் புழுக்கள், பொரித்த மெதுவான நீண்டுகள், முற்றிலும் புதிய மீன்கள் எல்லாம் தான். பக்குவமற்று அவை ஆக்கப்பட்