பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- #0 சோம்பல் தினம்-பெண்கள் இல்லை

மே மாதத்தின் விசேஷ தினங்களில் ஒரு நாள். மெதுவாக அசையும் காற்றில் கிட்டத்தட்ட ஜூன் மாதத்திய மந்த குணம்: நிறைந்திருந்தது. பழமுதிர் மரங்களில் மஞ்சள் மேகநிரை போல்,

சை பாடும் சிறு பறவைகள் கிளுகிளுத்தன. பூனைப் பறவை: ஒன்று ஒரு வேலியில் மெதுவாகக் கத்திக் கொண்டிருந்தது. சலவை. செய்த துணி மாதிரி வானம் வெளிர் நீலமாய்க் கிடந்தது. சூரியன் பொன்மயமாய் பிரகாசித்தது. ஆயினும் சூடு அதிகமின்றிக் கதகதத்தது. சோம்பியிருக்க-அல்லது, மீன் பிடிக்க-சுகமான நாள் அது. ரத்தத்தில் கொதிப்பேற்றும் எதையும் செய்வதற்கு. உகந்த நாள் அல்ல.

வீட்டுப் பெண்மணிகள் சுத்தம் செய்வதில் முனைந்திருந்தனர். வழக்கமாகப் பெண்கள் செய்வது போல, துணிகளே உதறுவது, து:சி தட்டுவது, பெருக்குவது, பொருள்களை வதை செய்வது: ஆகியவற்றைத் தீவிரமாகக் கவனித்தனர். தாத்தா எ ங் கு ம். தென்படவேயில்லே. விஸ் என்னும் கார், முன் முற்றத்தில், ஒக் மரங் களின் கீழ், அசையாதிருந்தது. ஆகவே அவரும் அதிக தூரம் போயிருக்க முடியாது. எங்கள் ஊரில் அவர் செல்லக் கூடிய இடங்கள், விடார் மரத்தடி, மாலுமி அலுவலகம், பில்லியர்ட். விளையாடுமிடம், ஜிம்மி மாமா கடை, வாட்ஸன் மருந்துக் கடை ஆகியவைதான். - -

வெண் சிப்பிகள் பரவிய வீதி வழியே, நான் நீரோரம் நோக்கி மெதுவாக நடந்தேன். ஸிடார் மரத்தடிப் பக்கம் லேசாகப் பார்வை செலுத்தினேன். வயோதிகர் பலர் காக்கைகள் மாதிரி’ அங்கே உட்கார்ந்திருந்தனர். கறுப்புக் கோட்டுகள், சிதைவுற்ற கப்பித்தான் குல்லாய்கள், உருக்குலைந்த அகலத் தொப்பிகள், அடிபட்டு நைந்த பழைய அங்கிகள் இவற்றினிடையே தாத்தாவும் காணப்பட்டார்.

அந்த ஸிடார் பெஞ்சு, நகரத்து முதியவர்களின் தனி உடைமை என்றே சொல்லலாம். காற்றில் கோணி, உப்பினுல் வெளிறுற்று நின்ற புராதன விடார் மரம் ஒன்றைச் சுற்றிலும் சதுரமான மர பெஞ்சு கிடந்தது. மாலுமி வீடு, கப்பல் சாமான்கள் நிலையம், இருல் மண்டிகளோடு கூடிய இருல் மீன் துறை ஆகியவற்றிலிருந்து சமதுரமே அதற்கு. எரிபொருள் கிடங்கு, வழிகாட்டும் படகு, நிறுத்துமிடம், மீன் பிடிக்கும் படகுகளைக் கட்டி வைக்கும் இதர துறைகள் எல்லாம் அதிலிருந்து வெகு தொலைவில் இல்லை. பழைய விடார். பெஞ்சு பலவீனமாகத்தான் ஒட்டியிருந்தது. ஏனெனில்,