பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோம்பல் தினம்-பெண்கள் இல்லை.

காற்றினுல் நீரில் குழிவு ஏற்பட்டது. தெறிக்கும் துளிகளிலே குதி ஒளி பட்டுச்சிறு சிறு சுடர்கள் கிளம்பின.

தாத்தா ஆழ்ந்த நெடுமூச்சுயிர்த்தார், குழாயை நிரப்பிஞர். வட்டமிடும் கடற் பறவை ஒன்றைக் குறிப்பிட்டார்: “நாம் கத்த, ஆடிகட்டிய, எதிலும் சேராத, சோம்பேறிகள் என்றே பலரும் சொல்வார்கள் என நான் நினைக்கிறேன். அது அப்ப்டி அல். உன் பாட்டி, தண்ணீர் அருகே வந்து தன் பாதரட்சைகளை அழுக் காக்கிக் கொள்ளத் துணிந்தால், லிடார் பெஞ்சியின் பக்கம் இரு பார்வை பார்த்து முன்னும் பின்னும் முகத்தைச் சுளிப்பாள்

அந்த ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிகளைப் பாரேன். செய்து முடிக்க வேணும் என்று மாரிக்காலம் பூராவும் நாம் அவர்களிடத் சொல்வித் தீர்த்தோமே, அந்த நூறு காரியங்களையும் இப்போது அவர்கள் செய்யலாமே. அதில்லாமல் அவர்கள் மகள் சோம்பேதி களாக உட்கார்ந்து விட்டார்கள். செத்த பேன் கூட அவர்கள் மேலிருந்து கீழே விழாது போலிருக்கு என்று ஏதேனும் கூறுவாள். ஆளுல், பெண்களின் சுபாவம் அது. அதனால் தான், பெண்கள், பிள்ளைகளைப்பெறுவது தவிர, வேறு உருப்படியான சிறந்த காரியம் எதையும் இதுவரைச் செய்ததில்லை. ஆண்கள் போல் அவர்களால் தமையல் செய்யவும் முடியாது. ஏனெனில் அவர்கள் சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்வதில்லை. சிறிய இழட்டு, பேண்ட்டம் இனப் இபட்டைக்கோழிகள் மாதிரித் தான் இவர்களும். பிராண்டியும், கொத்தியும்-அறிவொளி பெற்றதெனத் தோன்றுகிற, ஆஞ்ல் அப்படி இல்லாத-மணிக் கண்களால் அங்குமிங்கும் பார்க்கும் பண்புள்ளவர்கள் தான்.

அதைக் கேட்டு நான் சிறிது சிரிக்க நேர்ந்தது. நீர் எப்பொழு தாவது பேண்ட்டம் பெட்டைக் கோழிகளைப் பார்த்திருந்தால், அவை ஒருபோதும் சும்மா இருப்பதில்லை என்பதை உர்ைவீர். எப்போதும், தங்கள் கழுத்தை முற்றிலும் திருப்பி பேன் இருக் கிறதா என்று முதுகை ஆராயும். அல்லது, நெஞ்சிலும், சிறகுகள் அடியிலும் கொத்தும்; பிருண்டும், சிறகுகள்ை அடித்துக்கொள் ளும். எதன் மீதாவது தருவும். கோபுத்தால், அல்லது மற்று மொரு முட்டையை வெளியே தள்ளிவிட்ட பெருமிதத்தோடு, சதா கொக்கரிக்கும். தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, ஒரு கையில் துளசி துடைக்கும் துணியும், இறகுத் துடைப்பம் இன் இளுரு கையிலுமாக வீடு சுத்தம் செய்கிற பாட்டி கூட வயதினே சிறிய பேண்ட்டம் பெட்டை தான். குறை கூறுவதற்கு மட்டுமே அவள் தன் வேலையை நிறுத்துவாள். . .

  • இப்போது என்னையே எடுத்துக்கொள். உண்மையில் நான் சோம்பேறி அல்ல. அவன் செய்துகொண்டிருப்பதாகக் கருதப் படும் ஒரு வேலையை வைத்து, வீண்பொழுது போக்கி ஏமாற்று கிறவன் தான் சோம்பேறியாவான். அப்படி ஒப்பேற்றுகிற நபர்கள் பலரை நான் அறிவேன். சோம்பலுக்கும் சிந்தனக்கும்