பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தாத்தாவும் பேரனும்

கண்களை மூடியபடி சிந்திப்பதற்கும் கூட-வித்தியாசம் உண்டு. சும்மா நான் கண்ணே முடிக்கொண்டு வெயிலில் உட்கார்ந்து விட்டேன் என்பதல்ை நான் வீண் பொழுது போக்குகிறேன். என்றாகிவிடாது. -

உதாரணமாக, குளிர்ந்த மாரிக்காலம், மழையும் காற்றும் நிறைந்த வசந்தம் இவற்றின் கடுமைகளிலிருந்து இன்று நிர்ன் மீட்சி பெறுகிறேன். சென்றதிலிருந்து விடுபட்டு இனி வருவதைத் தாங்கிக் கொள்வதற்காக ஏன் சக்தியைச் சேமிக்கிறேன். வரும் ஆறு மாதங்களில், நமது சிந்தனே ஒருமைப்பாட்டையும் மிகுந்த உழைப்பையும் கோருகிற அனுபவங்கள் என்ன எதிர், படுமோ, யார் சொல்ல_முடியும் ஓர் ஏரோப்ளேனேக் கண்டு பிடிப்பது, அல்லது காங்கிரசுக்கு ஒடியாடி உழைப்பது போன்ற பெரிய வேலை எதையாவது நான் செய்யும்படி நேருமானுல், சென்ற வருஷ அலுவல்களால்_ ஒய்ந்து போன_ நிலையிலே உழைக்கப்” புகுந்து, நன்கு ஒய்வு பெற்ற உற்சாகத்தோடு வரும் ஒருவன என்னினும் மேலானவளுகிவிட அனுமதிப்பது அவமானமாகவே அமையும் ‘ என்று தாத்தா சொன்னர்.

நான் குறுக்கிட்டேன். ஆனல் நீங்கள் நன்கு வளர்ந்த மனிதர். (தன்னைத் தவிர யாரும் அவரை வயோதிகர் என்று குறிப்பிடுவதைத் தாத்தா விரும்பமாட்டார்.) நாளுேம்ே: அத்தை சொல்வது போல, சட்டை-வால் பையன். ஓய்வு என்பது பையன்களுக்கு நல்லதல்ல ஆவர்கள் எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்று பெரிய மனிதர் விதி எதுவோ இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மரம் வெட்டுவது, வெயிலில் கண் மூடுவது, அல்லது வலையைச் சரி செய்வது போன்ற எதையாவது கவனிக்க நான் உட்கார வேண்டியது தான் தாமதம். பெண்களில் ஒருத்தி வேகமாக வந்து சேருவாள்; கடைக்கும் போனது, அல்லது அடா அத்தை வீட்டுக்குப் போய் ஏதோ ஒன்றில் ஒரு கோப்பை, அல்லது வேருென்றில் அரை ராத்தல் வாங்கி வருவது போன்ற அலுவல் எதையாவது சுமத்துவர்ள் என்றேன். g

அநியாயம், அநியாயம் ‘ என்று தாத்தா பெருமூச்செறிந் தார். பெரியவர்களை விடப் பையன்களுக்கே அதிக ஒய்வு தேவை. எலும்பை வளர்ப்பதிலும், அவ்வெலும்புகள் மீது சதை யூடிய வைப்பதிலும் பையன்கள் ஈடுபடுகிறார்கள். இதுவே முழு, நேர வேலையாரும். பெரியவர்களே விடப் பையன்கள் அதிகம்ான். சத்தைச் செலவிடுகிறார்கள். இருபத்தோராவது வயசைக் கடக்கும் வரை பையன்கள் ஒரு ரக ஜூரம் பற்றியவர்களாக விளங்கு கிறார்கள். பெரியவர்களுக்காகச் சில்லறை வேலைகள் செய்யத் தான் பையன்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிரு.ர்கள் என்று மயக்க கான கருத்து ஒன்று நிலவுவதாகத் தோன்றுகிறது” என்றார்.

நல்ல இறைச்சி பையன்களுக்குப் பிடிக்காதது போல்