பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோம்பல் தினம்-பெண்கள் இல்லை 223

நடந்து கொள்கிறார்களே, அதே மாதிரித் தான் ைென்று நான் சிறிது கசப்புடன் பேசலானேன். ‘முதுகு, சிறகு, கால்,"இன்னும் வேலிக்கு அப்பால் வீசி எறிய வேண்டிய கழிவுகள் தான் பையன் களுக்குப் பிடிக்க வேண்டும் போலும் சரியான இறைச்சி ம்ெபிய வர்களுக்கு மட்டும் தான் பிடிக்குமாம். விறகு உடைப்பது, மீன்களேச் சுத்தம் செய்வது, பறவைகளின் குடலை நீக்குவது, கடைக்குப்போவது, முற்றங்களேச் செதுக்குவது, புல் வெட்டுவது இவையெல்லாம் பையன்களுக்கு இஷ்டமாகும் என்று கருதிப் படுகிறது. ஒரு பையன் பெரிய ஆளிடம் பேசும் முறையில், இதை நான் சொல்லப் பெருமைப்படுகிறேன் : பையன்கள் எதை விரும்புவார்கள் என்று பெரியவர்கள் கொண்டுள்ள கருத்துக்கும், பையன்கள் எதை விரும்புகிரு.ர்கள் என்று பையன்கள் நினைப் பதற்கும் அதிக வித்தியாசம் உண்டு.”

‘ உண்மை ; மிகுந்த உண்மை. அநியாயமும்கூட. ஆனல், மனித வாழ்வின் கடும் உழைப்பையும் தொல்லைகளையும் தாங்கிக் கொள்ளப் பையனைத் தயார்படுத்துகிருேம் என்பதுதான் பெரியவர் எண்ணம்’ என்று தாத்தா கூறினர்.

மனித வாழ்வின் கடும் உழைப்பு, தொல்லைகள் ஆகிய வற்றை எட்டிப் பிடிப்பதற்குள்ளாகவே நான் முற்றிலும் ஒய்ந்து போவேன். சிந்திப்பது என்று நீங்கள் கூறுகிறீர்களே, அதைச் செய்வதற்கு எனக்கு-வேட்டையாடுவது, மீன் பிடிப்பது ஆகிய நேரங்களில் தவிர, வேறு-நேரமே இல்லே ‘ என்று நான் சோக மாய்ப் பேசினேன்.

உனக்கு அப்பொழுது போதுமான நேரம் கிடைத்துள்ளது என்றே நான் சொல்வேன். ஒன்றை அல்லது மற்றதை, அல்லது இரண்டையுமே நீ வருஷத்தில் பத்து மாத காலம், பள்ளிக்கூடம் இல்லாத சமயமெல்லாம், செய்து வருகிறாய். பத்து மைல் தூரம் படகு செலுத்துவதிலோ, பறவை பிடிக்கும் நாய்க்குப் பின்னல், மழை காலத்துக் காட்டில் ஆறு மணி நேரம் நடப்பதிலோ நீ ஒரு போதும் களைப்படைவதாகத் தெரியவில்லே ‘ என்று தாத்தர் வெடுவெடுப்புடன் சொன்ஞர். -

அது வேலை அல்ல. நாம் செய்யவேண்டும் என்று மற்ற வர்கள் சொல்வதற்காக, நமக்குப் பிடித்த மில்லாததைச் செய்வதுதான் வேலை ஆகும் என்றேன்.

தாத்தா அதைச் சிறிது அசட்டை செய்தார். தன் குழாய்க் காம்பைக் குதப்பினர். மிக அருகே பறந்த ஒரு கடற் பறவை மீது துப்பினர். பிறகு பேசினர் : வேலை பற்றிப் பேசுவ தர்னல், இன்று காலையில் நான் நல்ல ஓய்வு பெற்றிருக்கிறேன். ஆகவே சிறு உண்மையான உழைப்பு நம்மில் ஒருவரையும் சாகடிக்காது என உணர்கிறேன். நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். இந்த மாரிக் காலத்தில் தொடர்ந்து இரண்டு சூருவளி வந்தபோது, நமது மீன் பிடிப்புக் குடிசை பலத்த் தாக்கு