பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

தலுக்கு உள்ளாயிற்று என்பதை நீ அறிவாய். இம்முறை அதை இன்னும் பலம் பொருந்தியதாக அமைக்கத் திட்டமிட்டிருக் கிறேன். காஸ்வெல் கடற்கரை நெடுகிலும், மரக்கட்டைகளும் அடிமரங்களும், இன்னும் பலவும் அலைகளால் எற்றுண்டு ஏராள மாய்க் கிடக்கின்றன. இப்பொழுது நீ உன்னையே உலுக்கிக் கொண்டு விதிவழி நடந்து-ஒடி அல்ல-ஜிம்மி மாமா கடைக்குப் போய், புளிப்பு ஊறுகாய், கேக்கு, கொஞ்சம் இறைச்சி, கூரை ஆணி, பத்துப்பென்னி ஆணி போன்ற சாமான்களை வாங்கி ஹா, நிர்ன் வீட்டுக்குப்போய் நமக்கு வேண்டிய இதர சாமான்களைச் சேகரிக்கிறேன். வார இறுதியை நம் இஷ்டம்போல் கழிக்கலாம். பெண்கள் எல்லாவற்றையும் சுத்தப்படுத்துவதில் ஈடுபட்டிருப்ப தால் நாம் இல்லாததை உணரவே மாட்டார்கள்.’

அது நியாயமான ஒப்பந்தமாகவே தோன்றியது. நான் எழுந்து, தாத்தாவிடம் ஒரு கையை நீட்டி, அவரைத் தூக்கி நிறுத்தினேன். நாங்கள் துறையைவிட்டுச் சென்றாேம். அவர் வீட்டுக்குப் போனார். நான் ஜிம்மி கடை நோக்கி நடந்தேன்.

இப்பொழுது நான் ஏமாற்ற முடியும் ; அது எனக்கே நிகழ்ந்தது என்று பாசாங்கு பண்ணலாம். ஆனல் அப்படி நடக்க வில்லை. அது ஒரு நீக்ரோச் சிறுவனுக்கே நடைபெற்றது. ஊர் முழுவதும் பரவித் தழாஷாக நிலைத்தும் விட்டது. அப்பாவின் குடும்ம் இளைப்பாறிக் கொண்டிருந்தது. ஜிம்மி மாமாதான் எல்லோரிலும் அதிகமாக ஒய்வு பெறுபவர். நான் கடைக்குப் போன சமயம், அவர் முற்றத்தில் எதன் மீதோ அமர்ந்து ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அவர் தொப்பி கண்கள் மீது கிடந்தது. அவரது சிறிய கொழுத்த கைகள் சிறு தொந்தியின் மேல் மடங்கியிருந்தன. -

ஒ, ஐயா என்றேன். ஓ, குழந்தாய். உனக்கு ஏதாவது வேண்டுமா ? உள்ளே போய்த் தேடி எடுத்துக்கொள். காகிதப் பையில் கணக்கை எழுதி விட்டு, பணத்தைப் பெட்டிமீது வைத்துவிட்டுப் போ’ என்றார். வெயில் படாமல் அவர் கண்களை மறைத்துக்கொண்டார். நான் மரியாதையின்றிச் சிரித்தேன்.

கதை இதுதான். ஒருநாள் சின்ன நீக்ரோப் பையன் ஒருவன் கடைக்கு வந்தான். மாமாவை இதே நிலையில் கண்டான்.

என்னுல் உனக்கு என்ன ஆகவேண்டும், பையா ?’ என்று, மூடிய கண்களோடு, ஜிம்மி மாமா கேட்டார். - -

“ அப்பா என்ன அனுப்பினர். அவருக்கு பத்துப்பென்னி ஆணி ஒரு ராத்தல் வேண்டுமாம், மிஸ்டர் ஜிம்மி. பின்பக்கத்துத் தாழ்வாரம் அநேகமாக விழுந்துவிடும் போலிருக்கிறது.” - உள்ளே போய்த் தேடிப்பார், பையா.அவை கடைக்குள் எங் து இருக்கும் என்று எண்ணுகிறேன். ஊறுகாய் பீப்பாய்க்கும்

மூன்றுக்கும் சமீபத்திலே என்று ஜிம்மி கூறினர்.