பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவானக் கனவ்ானே காண்டார்

இங்கிலாந்து சென்று, உனக்கே உனக்கென்று இரட்டைக்குழல் துப்பாக்கிகள் வாங்கிக்கொள்ளலாம். அல்லது இந் நாட்டிலேயே விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட, பொன்னிறப் பறவைகளும் நாய் களும் நிறையச் சித்தரிக்கப்பெற்ற, துப்பாக்கி ஒன்றை வாங்கலாம். ஆளுல், சுடக் கற்றுக்கொள்வதற்கு உனக்கு இப்போது தேவையான துப்பாக்கி இதுதான் ‘ என்று தாத்தா சொன்னுர், . -

ஒரு சிறுவனுக்கு அந்தத் துப்பாக்கியே மிக அழகானதாக இருக்கும். அதிலும் அவனுக்கு அப்பொழுது எட்டே வயதுதான் ; எனினும் அவனே நம்பி அபாயகரமான ஆயுதம் ஒன்றைக் கெர்டுக்கலாம் எனத் தாத்தா தீர்மானித்து விட்டர் ன்ன் ருகிறபோது, அது அற்புதமாகவே தோன்றும். இரு பது டாலர் மதிப்புள்ள சிறிய துப்பாக்கிதான் அது. ஆனல் அந்தக் காலத்தில் இருபது டாலர் என்பதே பெரும் நிதியாகும். அதைக் கொண்டு ஏகப்பட்ட பொருள்கள் வாங்கலாமே.

தாத்தா தன் குழாயை நிரப்பி, அதை மீசைக்கு அடியில் திணித்தார். துரத்துகிற நாய் ஒன்று, சமூகரீதியாய் கவனிக்க உரிமையற்றது என விலக்கப்பட்டிருக்கும் முயலே நோக்குவது போல, அவர் வெளியே துருத்தி நிற்கும் தன் காதுகளை என் பக்க மாகத் திருப்பிளுர். .

இன்னும் ஒரு நிமிஷத்தில் நான் நாய்களுக்குச் சீட்டி அடிக் கப் போகிறேன். நீ இத் துப்பாக்கியைச் சிறந்த முறையில் பயன் படுத்து. ஆனல், காட்டுக்குள்ளே புகும் முன்பு நான் ஒன்று சொல்ல. விரும்புகிறேன்.எனது கீர்த்தி இப்போது உன் கையில் இருக்கிறது. நீண்டு தொங்கும் சட்டை அணிந்த சிறுவனிடம் அவன் உயரத்துக் குச் சரியாக வருகிற துப்பாக்கி ஒன்றைக் கொடுத்ததால், என்ன அடு மடையன் என்றே உன் தாய் கருதுகிருள். உனக்கும், துப் பாக்கிக்கும், நீ அதைப் பயன்படுத்தும் முறைக்கும் தானே பொறுப்பு என்று அவளிடம் நான் சொன்னேன். ஒரு சிறுவன் எப் பொழுது துப்பாக்கிகளைப்பற்றிக் கற்றுக்கொள்ளத்தயாராகிருளுே அப்பொழுதே அவன் தயாராகிவிட்டான் ; அவன் எவ்வளவு சின்னவஞ்க இருப்பினும் பரவாயில்லை; கவனமாக இருப்பது எப்படி என்பதை அறியாப் பிராயத்திலேயே துவங்க முடியாது. உன் கையிலிருப்பது ஆபத்தான ஆயுதம். அது உன்னைக் கொல்ல லாம். என்னை அல்லது நாயைக் கொல்லலாம். கெட்டிக்கப்பட்ட துப்பாக்கி, அதை எடுத்தாளுகிறவன் கையில் சக்தி வாய்ந்த கொலைக் கருவியாக விளங்குகிறது என்பதை நீ சதா நினைவில் நிறுத்து, ஒருபோதும் மறந்துவிடாதே ’’ என்று அவர் சொன்னர்,

நான் மறக்கமாட்டேன் என்றேன். என்றும் நான் அதை. மறந்ததுமில்லை. -

தாத்தா தொப்பியை அணிந்து, பிராங்க், லேன்டி எனும் நாய்களை அழைத்துச் சீட்டி யடித்தார். பழகிய பறவைகள்