பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடையின் இன்பம்

பூண்டுகள்-மென்மையான கேசபத்திரி இனமும், பெயர் யாத, அகல இலைகள் பெற்ற வகையும்-வர்ணிக்க முடி குளுமை நிறைந்த, பசும் விரிப்பாய் வளர்ந்து கிடந்தன. வின்ேக மற்ற சிறு மலர்கள் தமது உருண்டைத் தலைகளைப் டெர்ன் இலே களுக்கு மேலாக நீட்டின. -

துரத்தில் எங்கோ பசுமாட்டின் மணி சோகமாய்க் கிணு கிணுத்தது. பரவி வரும் மாலை வேளையின் நெடிய, பயங்கரமான, நிழல்களுடே புகுந்து முன்னேறிய கனத்த நீக்ரோக் குரலிசையை தன்கு கேட்க முடிந்தது. பயந்ததுபோல் பாடினன் அவன். அவன் பயந்திருந்தான். தன் குடிசையையும், அங்குள்ள பெரிது கரிய இரும்புக் கெட்டிலின் கீழ் தி எரிவதையும் அவன் பார்க்கித வரையில் அவனது பயம் குறைந்துவிடாது. விக்காடர்க்களும், சில் வண்டுகளும், இரைச்சலிடும் இதர பூச்சிகளும், வாத்திய கணம் இசைக் கச்சேரிக்கு சுருதி கூட்டுவதுபோல, தங்கள். அந்தி நேரக் கீதங்களை ஒலிபரப்பத் தொடங்கின. ‘

அவற்றை எல்லாம் - மரங்கள், புல், பாசி, பூச்சிகள், பறவைகள், பெர்ன் பூண்டுகள், புஷ்பங்கள், அஸ்தமன சூரியன், மேலெழும் ஈ வரிசைகள் அனைத்தையும்-நான் என் அறிவிஞன் நோக்கினேன். இருள் ஊர்ந்து பரவுவதை உணர்ந்தேன். மீனு: மினுக்கும் முதல் நட்சத்திரத்தைக் கண்டேன். சதுப்பில் பொங்கி எழும் இரைச்சல்களைக் கேட்டேன். காற்று குளிரக் குளிர், அதிகரித்து வந்த மூடுபனியின் விஷவாயுவால் என் எலும்புகள் குளிர்ச்சி அடைந்தன. சலனமுற்ற உயிரின் ஆயிரமாயிரம் சிதறல்களிடையே நிகழ்வதை கவனிப்பதில் நான் ஆழ்ந்துவிட்ட தால், ஒரு பெரிய மீன் கவ்வியபோது, சுத்தப் பீதியால் அதை இழந்தேன். -

அந்தி வேளையில் பாஸ் மீன்கள் அழகாய் கவ்வின. நாங்கன் இருவரும் பத்து மீன்கள் பிடித்தோம். அவை மிகப் பெரியன அல்ல. ஆளுல் இரண்டு ராத்தல் கனமுள்ள பெருவாயன் சாட்டை போன்ற தூண்டிலில் சிக்குவது பெரிய விஷயம்தான். காரிருள் பரவியதும், மீன்கள் பம்மின. நான் படகை நீரோட் உத்தில் தள்ளி, அந்த வேகத்திலேயே துறை நோக்கிச் செல்லும் படி விட்டுவிட்டேன். தாத்தா துரண்டில்களை எடுத்துப் பிரித்து, பெட்டியில் வைத்தார். படகு மரவேர் முதலியவற்றில் மோதி விடாதபடி நான் கவனித்தேன். தாத்தா குழாயைப் பற்ற வைத்து, அமைதியாகப் புகைத்தார். அவர் ஒன்றுமே சொல்ல வில்லை. --- - - - ‘ .

நாங்கள் துறை சேர்கையில் இரவு வெகு நேரமாகி விட்டது. வெள்ளிகள் பிரகாசமாய் பூத்துக்கிடந்தன. அம்புலியின் சிறு கீற்று மரங்களுக்கு மேலாக, திருட்டுத்தனமாக நழுவிச்சென்றது. தவளைகள், பூச்சிகள், இரவுப்பறவைகள், மிருகங்கள் எல்லாம் காதடைக்கும் இரைச்சில் எழுப்பின. நித்தியத்துவம் பற்றி,