பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடைகின் இன்பம் - 3

நானறிந்த மனிதர்கள் பலர்-கெட்ட எண்ணம் எதுவும் இல்லாது. வர்கள், நாற்பது வருஷ காலத்தில் ஒரு தீயசெயல் செய்யாத, வங்கள்கூட - முன் வந்து, ஆன்மிக அமைதியைக் குலைத்த, பிரமிக்கத்தக்க பாபங்களை ஒப்புக்கொள்வர். அவர்கள், ஒதுக்கி: வைக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக, பெருமையடிக் கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றும். ஆயினும், ஒரு ஞாயிற்றுக்கிழமை நாங்கள் பெரிய நகரம் போளுேம். ஒரு பெரிய கூடாரத்தில், பில்லி ஸண்டே நெருப்பெழப் பேசியதைக் கேட்டோம். நான் வன்மையாய்க் கவரப்பட்டேன். ஏனெனில் சைத்தான் விரோதி மிஸ்டர் ஸண்டே ஒரு காலத்தில் பேஸ் பத்து ஆட்டக்காரராக விளங்கியவர். அவர் பேச்சைக் கேட்டு, நரகநாச-பயம் பெற்றுவிட்டதால், நான் ஒரு வாரம் புகை பிடிக் காமலே இருந்தேன். ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் பிடிப்பதை. யும், பந்தாடுவதையும்கூட சிறிது நிறுத்தி வைத்தேன்.

எனக்கு மிகுதியும் பிடித்தது-தாத்தாவுக்கும் அப்படித். தான்-நீக்ரோக்களின் முகாம் கூட்டங்களே, அந்த வட்டாரத் தில் உள்ள நீக்ரோக்கள், பெரியவர்கள் சின்னவர்கள், ஆண்கள் பெண்கள், சாதாரணமானவர்கள், விசேஷமானவர்கள் எல். லோரையும் நாங்கள் அறிவோம். நகருக்கு வெளியேயுள்ள வெட்டவெளியில் அவர்கள் குழுமுவர். உணவுகள் குவிக்கப் பட்டுள்ள பெரிய கரடுமுரடான மேஜைகள் மேலே பாதுகாப்பாக கூரை வேய்ந்திருக்கும். இக்கூட்டம் சிலசமயம் நாள் கணக்கில் வளரும். போதிப்பது, புத்திமதி கூறுவது, சைத்தானே விரட்டுவது, அழுவது, ஆட்டுக்குட்டியில் ஆவிர்ப்பவிப்பது எல்லாம் முகாம் கூட்டங்களில் ஏராளமாக இருக்கும். எனினும், வெள்ளையரின் உத்தாரணக் கூட்டங்களைவிட அவை எவ்வள்வோ நல்ல தன்மை உடையனதான். கருநிறத்தவர்கள் கர்த்தரோடு நெருங்கிய உறவு பூண்டிருந்தார்கள் என்றே தோன்றியது. பக்தி குன்றிய வர்கள் தங்கள் தெய்வ பக்தியைப் புதுப்பிக்கவும், புது நம்பிக்கை பெறவும் அங்கே கூடினர்கள். ஆனல் பெரும்பாலோர் தமாஷ். பெறவே அங்கு வந்தார்கள்.

முலாம் பழங்களும், இறைச்சிப் பண்டங்களும், பொரித்த, கோழிக் குஞ்சுகளும், அரிசிப் புலவும் அதன் அங்கமாக அமைந்தது. போலவே, மீன் பொரியல் நாற்றம், சிறு கொப்பரையில் மீன்கள் வெடிபடுவது, கொழுப்புப் படிந்த கைகளும் முகங்களும் தீ ஒளியில் மின்னுவது முதலியனவும் அதன் பகுதியேயாகும், வீட்டில் தானியத்திலிருந்து தயாரித்த விஸ்கி, ஸ்கூப்பர்நங் திராட்சையி லிருந்து வீட்டில் செய்த ஒயினும், இசையைப் போலவே, அவ்: விழாவின் பாகமாகும். அதுபோன்ற சங்கீதத்தை நான் பல. வருஷங்களுக்குப் பிறகு ஆஃபிரிக்கா செல்லும்வரை வேறு எங்கும் கேட்கவில்லை. வாகம்பா இனத்தினரின் தொழில் பாடல் களையும், பரவசமூட்டும் பாட்டுக்களையும், வாலுயிங்குலுவினர்