பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

சனிக்கிழமை பெரிய விளையாட்டின் நாள். நகரத்தில் தேர்ந் தெடுக்கப்பட்ட இளைஞர்கள் கோஷ்டியும் பக்கத்திலுள்ள கிராமம் ஒன்றின் கோஷ்டியும் போட்டியிடும். ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது பேர் விளையாடுவர். பந்தைப் பிடிப்பவன் ஒரு * கொம்பு -அப்படித்தான் நாங்கள் குறிப்பிடுவோம்-வைத் திருப்பதுடன், வயிற்துப் பாதுகாப்பும், கெண்டைக்கால் பாது காப்புகளும் அணிந்திருப்பான். ஃபிரெட் என்பவன் தன் #டம் போல் இடது கை ஆட்டம் ஆடினன், ஸெயின்ட் ஜார்ஜ் டொனல்டும் பில்லும் எதிர்த்து நின்றார்கள். டொனுல்ட் அதிகமான அசட்டுத்தனம் பண்ணுமலும், அளவுக்கு அதிகமாகக் குடிக்காமலும் இருந்திருந்தால், பெரிய பந்தயத்தில் வெற்றி கண்டிருக்கக் கூடும். அளவுக்கு அதிகமான அசட்டுத் தனத்தில் ஈடுபடாதிருந்தால் அவசியம் வெற்றிபெற முடியும் என்ற திலேயில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு ஆள் என்றும் இருப்பதாகவே தான் நினைக்கிறேன்.

சனிக்கிழமை இரவுகளில்தான் தெருக்களிலிருந்து சிறு நபர்களேச் சீக்கிரமே அகற்றி விடுவார்கள். ஏனெனில் போட்டிக் கட்சியினர், முதலில் ஒரே ரக ஜாடிகளிலிருந்து மூக்கு முட்டக் குடித்தும், நள்ளிரவு சமயத்தில் மொட்டை ஆயுதங்களை ஒருவர் மண்டைக்குள் மற்றவர் திணித்தும் பகைமையைத் தீர்த்துக் கட்டத் துணிவர். டாம் அல்லது ஜோ அல்லது பில் ‘ குடித்துக் .ெ கா எண் டி ரு க் கி மு ன் -அவன் எப்பொழுதும் குடித்துக் கொண்டிருக்கிருன் என்னும் பதத்தை உபயோகித்தார்கள்என்ற செய்தி பரவும். உடனே, வேட்டையை நாடி ஒடும் நாய்கள் மாதிரி, சகோதரிகளும் தாய்களும் அத்தைகளும் தங்கள் உறவின ரைத் தேடிப் பிடிக்க விரைவார்கள். தந்தையர் பலவீனமுடை யவர்கள் தான். சில சமயம் ஒரே குடும்பத்தின் இரண்டு நபர்களை -தந்தையும் மகனையும்-வீட்டுக்கு இழுத்துவர நேரிடும். அவர் கள் பரஸ்பரம் கட்டிப்பிடித்துக் கொண்டு, சண்டையிட்டபடியே அல்லது துக்கமாய்ப் பாடியவாறு காணப்படுவர். சமூக ரீதியில், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பவர்கள் அல்ல. ஒருவன் ஒரு ஜாடிக்குள் தன் முகத்தைப் புகுத்தி விட்டானென்றால், சோர்வாதம் வருகிற வரை அதை அங்கேயே பதித்திருப்பான்.

தான் அறிந்த வரையில் அதுதான் சுத்தமான விளையாட்டு என்பதேைலயே அவர் பேஸ்பந்தை அங்கீகரிப்பதாகத் தாத்தா சொன்னர். மூன்று அடி, அவுட் ; நாலு பந்து, நட ; சரியும் தப்பும் தெளிவாகத் தெரியும் வலைக்கு மேல்ே போனல், தீர்ந்தது; அடித்தளுத்தில் இவ்வளவு மட்டுமே ; வீசும் தூர்த்தி விருந்து பிடிபடும் நிலைவரை எப்போதும் சமதூரம் தான். இவை சரியே. ஆளுல் விளையாடி முடிந்த பிறகு தொடர்கிற குடிங்ாட் ங்களை அவர் அங்கீகரித்ததில்லை. பிளாக் லாக்ஸ் அபவாதம் ம்பலமானபோது அவர் நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது.