பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

பந்தைப் பற்றிக்கொண்டு எதிரியை ஸ்தம்பிக்க வைப்பது எப்படி என்பதை கிளைட் எனும் முரட்டுத் தடியனுக்குக் காண்பித்தாள். அவள் அவனைத் தாக்கிய போது, அவன் பற்கள் ஆட்டம் கண்டன. பேஸ் பந்தாட்டத்தில் அவள் எந்நிலையையும் சமாளிப்பாள். பந்து வீசும் போது அவள், அநேக பெண்களைப் போல் கோணல் கை வீச்சு பயிலாது, உயர்த்தியும் கடுமையாகவும் எறிவாள்.

தாம் என்னதான் துஷ்டத்தனங்கள் செய்த போதிலும், அவைபற்றிய கள்ளத்தனக் கடிதம் எதுவும் அவள் நம் வீட்டா ருக்கு அனுப்பமாட்டாள். தலைவரிடம் சென்று புலம்புவதுமில்லை. ஒழுக்க முறை பற்றிய தனது பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது மில்லை. இப் பொறுப்பை ஆபீசுக்கு அனுப்பிவைப்பது ‘ என நாங்கள் குறிப்பிடுவோம். எவனும் ஒருபோதும் கூட அவளால் ஆபீசுக்கு அனுப்பப்பட்டதில்லை. வகுப்பு முடிந்த பிறகும் அவள் நிறுத்திவைத்திருந்த பெரிய முட்டாள் ஒருவன் ஆண்மைக் கர்த்தால் அவளை இறுகப் பற்றிய போது கூட, அனுப்பவில்லை. அவளை எதிர்த்த பாம்புகளை அவளே கொன்றாள். அவள் தன் இடது கையால் அவன் மோவாயில் ஒரு குத்து விட்டாள் ; வலக் கையால் மற்றாென்று கொடுத்தாள். அதன் பிறகு எவ்விதத் தொல்லையும் எழ வில்லை. ஐந்து சகோதரர்கள் கூட-எல்லோரும் செந்தலேயர்களே-அவள் வளர்க்கப்பட்டாள் என்பது என் கேரி மே வகுப்புக்கு வெளியே-நாங்கள் அவளை கேரி மே என்றே அழைத்தோம்-விருந்துகளின் போது பேராதரவு பெறுவது வழக்கம். அப்பொழுது, தபால் ஆபீஸ், புட்டிய்ை உருட்டு முதலிய முத்தமிடும் ஆட்டங்களை நாங்கள் விளையாடு வோம். சிறுவர் சிறுமியரிடம் எப்படிப் பற்றுக்கொள்வது என் பதை அவள் இயல்பாகவே உணர்ந்திருந்தாள். அவள் விமானப் பயிற்சி பெற்று வந்தாள். அதில் தனது அபிவிருத்தி பற்றி அவள் அரை மணி நேரம்-வகுப்பு நடக்கும் போதே-எங்களுக்குக் கூலு:வாள்.

தினம் ஒரு மணி நேரம் ஆவள் வாசித்துக் காட்டுவாள். அது சிறுபிள்ளைப் பாடமாகவும் இராது. மார்க் ட்வெய்ன், கிப்ளிங், மற்றும் புத்திரிகைகளில் உள்ள தற்கால விஷயங்கள் ஆகியவற்றை அவள் நிறையவே வாசித்தாள். நானறிந்த வரை, கேரி மே படிக்கிற வேளையில் எவனும் காகித விமானம் செய்து வீசியது மில்லை ; எச்சில் துப்பிக் களித்தது மில்லை. நாம் மெய் மறந்து போகும் விதத்தில் படிக்கத் கூடிய பிறவி வாசகர்களில் அவ்ளும் ஒருத்தி. அவள் ஷேக்ஸ்பியரைக் கூட வாசித்துக் காட்டினுள். அதையும் ஒயில்ட் வெஸ்ட் அற்புதக் கதை போல் தொனிக்கச் செய்தாள். பன்றியை வதக்குவது பற்றி சார்லஸ் லாம்ப் எழுதி புள்ளதை அவள் வாசித்து நான் கேட்ட முதல் தடவையை எண்ணிக் கொண்டால், இப்போது கூட எனக்குப் பசி எடுக்கிறது.