பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பர். கீதம்-2

பாஷையில் ஏசிக்கொண்டிருந்தது. ஆனல் அது வேலை மிகுதியினுல் ஏசியது. நான் ஐம்பதாவது குண்ட்ைச் சுட்டபோது, மரத்தடியில் தரை மீது ப்தினன்கு புருக்கள் கிடந்தன. என் கைச் சதை, துப்பாக்கி இடித்ததனால், கறுப்பும், நீலமும், சிவப்புமாய் மாறி யிருந்தது. - o

நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கடைசிப் பதினைந்து குண்டுகளால் நான் பத்துப் புருக்களே விழ்த்தியிருந்தேன். அவற்றில் சிலவற்றை இருமுறை சுட்டிருந் தேன. -

எனது பழைய கான்வாஸ் வேட்டைச் சட்டையில் புருக்களைத் திணித்தேன். துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, வயலுக்குக் குறுக்கே நடந்தேன். கொஞ்சம் குளிர ஆரம்பித்திருந்தது. சூரியன் சிவந்த முகத்தோடு படுக்கை நோக்கிச் சென்றான்: இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பெர்சிம்மன் மரங்களில் பழங்கள் நிறைந்துவிடும்; பிறகு காடைகளின் பருவம் துவங்க வெகுகாலம் ஆகாது என நான் எண்ணினேன்.

ஒரு காரின் மிதிபடி மீது தாத்தா உட்கார்ந்திருந்தார்.-அத் நாட்களில் கார்களுக்குக் கதவுகளின் அடியில் மிதிபடிகள் இருந்தன.-அவர் எதையோ கையில் பிடித்திருந்தார். நான் முற்றத்தில் புகுந்து, வேட்டை அங்கியை விரித்து உதறினேன். புழுக்கள் வெளியே விழுந்தன. தாத்தா திருப்தியோடு தன் தோழர்களைப் பார்த்தார். அவர்கள் தலையை ஆட்டினர் ; புன்னகை செய்தனர். இவன் அதிகபட்ச எண்ணிக்கையைச் கட்டிருந்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன் என்று ஒருவர் சொன்ஞர். அவர் சும்மா பரிகசித்தார். ஏனெனில் அக்காலத்தில் புருக்கள் விஷயத்தில் யாரும் அதிகக் கவனம் காட்டியதில்லை.

நாங்கள் வீடு திரும்பும் போது, தாத்தா சொன்னர் : “நான் சொன்னது போல்தான். உலகத்திலேயே மிக இலகுவான கடின வேட்டை, அல்லது மிகக் கடுமையான எளிய வேட்டை இதுவே. அதைச் சரியாகக் கணித்துவிட்டால், அது வெகு சுலபமானது. ஆளுல் சரியாக நிர்ணயிப்பதற்கு ஏகப்பட்ட வெடிமருந்து செலவிட வேண்டும். அதற்குப் பிறகுதான், புருக்களைக் குறி வைத்து வசமாகச் சுடுவதற்கு மூளைக்கு அதிக வேலே தரவேணும் என்பதை நீ ஒப்புக் கொள்வாய். கடைசியில் எல்லாம் சுலபமாக அடிபட்டுவிடும். அத்ளுல் முதலில் பறவைகளை எப்படித் தப்ப விட்டோம் என்று நீயே வியப்படைவாய். அடுத்த புரு வேட்டை வரையில்தான். அதன்பிறகு நீ மீண்டும் அடிமுதல் ஆச்சர்யம் கொள்ள நேரிடும். ‘ - -

நாங்கள் வீட்டினுள் திரும்பியபோது, தாத்தா கூறினர் : ‘. ஆயினும், நான் ஒன்று கூற்வேண்டும் புருவைத் தரை மீது வீழ்த்திவிட்டாயோ, அத்துடன் உன் தொல்லைகள் தீர்ந்தன. அவற்றின் மேல் ஊதிஞல் போதும். சிற்குகள் அகன்றுவிடும்