பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

இரவு உணவுக்கு முந்தி நீ அவற்றைச் சுத்தப்படுத்த முயற்சி செய், பார்ப்போம்.”

மறுநாள் மாலை, இரவு உணவுக்காக மிஸ் கேரி மே நைட் வந்தான். அவள் மட்டும் மூன்று புருக்கள் தின்றாள். அதறகுமுன ஒருபோதும் அவள் எந்தப் பறவைகளையும் அவவளவு ருசித்துத் தின்றதில்லை ; ஏனெனில் இவற்றில் குண்டு அடி மிகக் குறைவாகப் பட்டுள்ளதுதான் காரணம் என்று சொன்னன். மிஸ் கேரிமேநைட் தான் அறிந்ததை விட மிகவும் சரியான பேச்சையே பேசிளுள் எனக் கொள்ளலாம்.

தாத்தா விநோதமானவர் என்றே நான் கருதுகிறேன். மற்றவர்களுக்கு அர்த்தழே ஆகாத பலப்பல விஷயங்களை அவர் கண்டிப்புடன் வற்புறுத்தினர். அவர் தனது கருத்துக்களுக்கு ஏற்ப, தனிப்பட்ட சட்டதிட்டங்களைப் பூரணமாக வகுத்து, ஒவத்திருந்ததாகவே தோன்றியது. அவை அவருக்கு நல்லனவாக இருந்தன. நாம் இரண்டு காரியங்கள் செய்ய முடியும் : எதையும் அவர் போக்கிலேயே செய்யலாம். அல்லது, அதைச் செய்யாமலே இருந்துவிடலாம். -

ஒரு சமயம் அவர் என்னிடம் சொன்னுர்: நான் ஒரு கிழட்டு ஆண் ராக்கூன், எனது வழிகளின்படி நான் கிழடாகி மந்த மடைந்து விட்டதால், புதிய முறைகளைக் கற்க இயலாது. நான் யானையைக் கண்டதுண்டு : ஆந்தையைக் கேட்டதுமுண்டு. காரணம் இல்லாமல் நான் எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை. அக் காரணம் பிறருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆளுல் அது எனக்குப் பிடிக்கிறது. ஏனெனில் அனைத்தையும் நான் சோதித் திருக்கிறேன். நான் செய்யாத ஒவ்வொரு தவறுக்கும் பிரதியாக இரண்டு தவறுகளை முன்பே செய்துள்ளேன். தவறு செய்தாயினும் பரிசோதனை பண்ணு என்பதன் நினைவுச் சின்னம்ாகவே என்ன் நீ மதிக்கலாம்.’

தாத்தாவுக்கு விசித்திரமான வெறுப்புகள் பல உண்டு. முதலாவதாக உரத்த பேச்சாளியை அவரால் சகிக்க முடி. யாது. அழுத்தமாகக் கூறவேணும் என்பதற்காகக் கூச்சலிடு கிறவன், அவனது மூளை இருக்கவேண்டிய காலி இடத்தில் சுழலும் காற்றையே எதிரொலிக்கிருன் என்று அவர் சொன் ஞர். முக்கியமாக, காட்டில் கூச்சலிடுவதை-விசேஷமாய், நாய்களை நோக்கிச் சதா கூப்பாடு போடுகிறவர்களை-அவர் வெறுத்தார். அப்படிச் செய்வது நாய்க்கு மிட்டும் குழப்பம் தரவில்லை, தனக்கும் குழப்பம் ஏற்படுத்துகிறது என்று அவர் சொன்னர். அது அவருக்குக் கூச்சம் உண்டாக்கியது. - விடாது பேசும் குணம் பெற்றவர் அவர். பே ச் சி ல் ஏதேனும் சாரம் இருந்தால் அவர் நெடுநேரம் பேச ஆசைப் படுவார். சோம்பல் சளசளப்பை, சொல்வதற்கு விஷயம் இல்லாமலே வீண் பேச்சுப் பேசியவர்களை, அவர் முற்றிலும்