பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம., ம்பர் கீதம்-2 149

வெறுத்தார். தன் பேச்சில் குறுக்கிடுவதையும் வெறுத்தார், பாழாய்ப் ப்ோகும் முட்டாள்கள் குறுக்கிட்டதனால், பிறவி யிலேயே செத்துவிட்ட இனிய எண்ணத் துணுக்குகள் இவ் வுலகில் நிறைந்துள்ளன’ என அவர் கூறுவது வழக்கம்.

ரொம்ப உயர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிடும் நபர் களே-இளையவராயினும், முதியவராயினும்-தாத்தா வெறுத் தார். கூரிய புத்தி உடையவைேடு காலத்தைப் போக்குவதற்கு

அவருக்கு நேரமில்லை. அவருடைய நண்பர்கள் சாதா ரணமானவர்கள். தங்களுக்கு என்ன தெரியும் என்பதை

அவர்கள் அறிந்திருந்தனர். தாங்கள் அறிந்திராத விஷயங் களைப்பற்றி அவர்கள் வாய் திறப்பதே இல்லை. சாப்பிடும் வேளையில் விவாதம், தர்க்கம், சி க் க ல | ன பிரச்னைகள் போன்றவற்றுக்கு அவர் இடம் தருவதில்லை. அவை அவரது ஜீரண சக்தியைப் பாதித்தன. உணவு மேஜை முன் குழந்தை கள் காணப்பட வேண்டும், கேட்கப்படுதல் தகாது என்பது தான்; நான் மிகவும் சிறியவகை இருந்தபோது, அவர் எனக் குச் சொன்ன முதல் விஷயம் என்ற ஞாபகம் எனக்கு இருக் கிறது. பெரியவர்களில் பலருக்குக்கூட இது பொருந்தும்.

மரியாதை விஷயத்திலும் அவர் பிடிவாதமானவர். மரி யாதையற்ற தன்மைக்கு ம ன்.ணி ப் பே கிடையாது என்ற கொள்கை அவருடையது. அவர் சொன்னுர்- ஐயா , தயவு செய்து ’’, ‘ நன்றி, அம்மா ஆகியவை துரசிபோல் மலிவானவை ; சாதாரன நல்லொழுக்கம் ஒரு ம னி த னை அளவிட உதவும் ; ஏனெனில், வளையாவெட்டியான முட்டாள் தான், அநாவசியமாக, முரட்டுத் தனத்தோடு நடப்பான். ரொம்ப காலத்துக்கு முன் நிகழ்ந்தது. ஆயினும் எனக்கு வெகு நன்முக ஞாபகமிருக்கிறது. ஊறுகாய்ப் படகில் வரும் வில்லி என்று தாத்தா குறிப்பிட்ட ஒருவனுடன் கொஞ்சம் தொல்லே ஏற்பட்டது ஒரு நாள். கடல்மீது செல்லும் உல்லா சப் படகோடு துறையில் வந்திறங்கும் பணக்கார யாங்கி களில் இந்த வில்லியும் ஒருவன். படகுக் குல்லாய், அகல மார்புடைய நீலக் கோட்டு, வெள்ளை பேன்ட்ஸ், வெண் மையான பாதரட்சைகள் எல்லாம் அவன் அணிந்திருந்தான். அவளுேடு வேறு ஒருவனும் மூன்று பெண்களும் இருந்தார் கள். படகில் அவர்கள் நடந்துகொண்ட விதத்திலிருந்து, கொஞ்ச நேரமாகவே அவர்கள் அதிகம் குடித்து வருதிருர் கள் என்று தெரிந்தது. வெயிலின் சூடு, விஸ்கிக் குடி இவை காரணமாக அந்த வில்லியின் முகம் பீட் கிழங்கு மாதிரி கருஞ் சிவப்பாக விளங்கியது. - -

தகராறு எதைப் பற்றியது என்பதுகூட எனக்குத் தெரி யாது, படகோட்டிகள் சங்கத்துக்குச் சொந்தமான துறையில் அவன் படகு துப்புக்கெட்ட முறையில் நிறுத்தப்பட்டிருந்த