பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் .ே ம்

விஷயம் எதையோ பற்றியது என்று எண்ணுகிறேன். அப் படகு வழிகாட்டும் படகில் இடித்தபடி நின்றது. சங்கம், துறைமுகம், லாஞ்ச் ஆகியவற்றில் தாத்தாவுக்குக் கொஞ். சம் அக்கறை உண்டு.

அவனது படகை வேறொரு பகுதிக்குத் தள்ளிவிடும்படி, அல்லது லாஞ்ச் மீது அதிகம் தாக்காது இழுத்துக் கட்டும் படி, அல்லது இதுபோன்ற கண்ணியமான கோரிக்கையை வில்வியிடம் அவர் தெரிவித்ததாக நான் நம்புகிறேன். வில்லி அதை நல்லதனமாக ஏற்கவில்லை. அவன் சுடப்போகிறவன் போல, ஆரவாரமாகத் துறை வாராவதி மேல் வ ந் தா ன். கைகன் ஆட்டிடிபடி கூச்சவிடத் தொடங்கினன். பெண்களின் பார்வையில் பெரியவனுகத் தோன்றும் கருத்தோடு அவன் பேசினுன். தனது படகை என்ன செய்யவேண்டும் என்பது பத்திக் கூனல் முதுகுக் கிழவன் எவனும் தனக்குச் சொல்ல வேண்டியதில்லை; கிழவன் ஒழுங்காக நடக்காவிட்டால், தான் அந்த ஊரையே விலைக்கு வாங்க முடியும் என்றெல்லாம். அவன் சொன்னுன். தாத்தா தனது வேண்டுகோளை மீண்டும். பணிவான குரலில், தயவு செய்து லார் எல்லாம் உபயோகித்துக் கூறிஞர்.

வில் வி முழங்கினன். ஏண்டா, கிழட்டு நாய் மகனே ‘ என்று. தென் பிராந்தியத்தில் விவாதத்தின்போது அ. தி க ம் செல்லுபடியாகாத ட்ரூமன் வார்த்தையை அவன் உபயோ கித்தான். நான் என்ன செய்வேன் என்றால்-’

அவன் செய்ய விரும்பியது நல்லதோ, கெட்டதோ அவ. குல் அவ்வளவே பேச முடிந்தது. தாத்தா இருபது-முப்பது வயது வாலிபன் மாதிரி பலம் பெற்றவர். அவன் மோவாயில் ஓங்கி ஒரு குத்து வி ட் ட ர். அந்த வில்லி நிலைகுலைந்து தள்ளாடி தண்ணீருக்குள் விழுந்தான். தங்க இழை ஒடிய அவன் தொப்பி நீரோட்டத்தில் சுழன்று சென்றது. அவன் அரைவாசி கட்டையாகிவிட்டான். திண்ணிரில் அடித்துச் சிதறிக் கொண்டுமிருந்தான். - தாத்தா வழிகாட்டும் படகில் குதித்து, ஒரு கொக்கியை எடுத்தார். வில்லியின் கால்சட்டைப் பின்புறத்தில் அதை மாட்டி அவனைப் படகினுள் இழுத்தார். அவன் பெரிய மீன் போல் மூச்சுத் திணறி. வாய் பிளந்தபடி தோன்றினன். பிறகு அவனுக்கு வயிற்றுக் குமட்டல் ஏற்பட்டது. தாத்தா அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

ஆவர் தி ஆடும் துறைக்குத் தாவினர். பெண்களுக்கு வணக்கம் தெரிவித்தார். நான் உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன், சீமாட்டிகளே. அந்தக் கனவானின் பாஷை சீமாட்டிகளின் முன்னிலையில், அருவருக்கத்தக்கதாக எனக்குத் தோன்றியது. தயவு செய்து என் பின்ழயைப் பொறுத்தருள்க’