பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ெடம்பர் கீதம்-2

என்றார், பிறகு மற்றவனே நோக்கி, இதுதான் கடைசித் தடவை. படகை நகர்த்துங்கள். த . வு செ ய் ’ என்று அறிவித்தார். -

நாங்கள் துறையை விட்டுச் செல்கையில், பட்டணத்து எத்தர்களும் மூன்று பெண்களும் படகை நகர்த்திக்கொண்; டிருந்தார்கள்.

வீடு திரும்பும் வழி நெடுகத் தாத்தா முனகியபடி வந்தார். அவர் சண்டைகளை வெறுத்தார். ஆளுல் மரியாதை எவ்வித நன்மையும் அளிக்காத சமயமும் இடமும் எப்போதாவது வந்து சேரும். அப்பொழுது கெட்ட நடத்தையை, அதனினும் மோசமான நடத்தையிஞலேயே எதிர்க்கவேண்டும் என்றாச்.

நீ செய்வது சரி என்பதை நீயும், தான் செய்வது தவறு என்பதை எதிராளியும் அறிந்திருந்தால், விவாதத்தை வேகமாகத் தீர்ப்பதற்குரிய வழி மூக்கில் ஓங்கிக் குத்துவது போல் வேறெதுவும் கிடையாது. ஆளுல் நிச்சயமாய் அது கெளரவக் குறைவானதுதான் ” என்று அவர் சொன்னர்.

காட்டில் நல் ஒழுக்கத்தைக் கடைப் பிடிப்பதில் தாத்தா கண்டிப்பானவர். தங்குமிடங்களே சுத்தம் செய்தல், குப்பை கழிவுகளை மண்ணில் புதைத்தல், படகுகளைக் கழுவல், துப் பாக்கிகளைத் துடைத்துச் சுத்தமாக்கி, எண்ணெய் பூசிப் பாது காப்பது போன்ற விஷயங்களில் அவர் எவ்வளவு பிடிவாத மாக இருந்தார் என்பது பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். தடிப் பன்றியுடனே, அல்லது முரட்டுப் பேர்வழியோடு சேர்ந்து அவர் மீன் பிடிக்கவோ, வேட்டையாடவோ மாட்டார்.

ஜோ எனும் நபருடன் சேர்ந்து அவர் அதிகமாகக் காடை வேட்டையாடுவது வழக்கம். அவன் மிக இனியவன். அவனைக் காட்டுக்கு அழைத்துச் சென்று, பறவை பிடிக்கும் நாய்களை அவிழ்த்து விடும் வரைதான் அப்படி இருப்பான். அப்புறம் ஜோ பன்றியாக மாறிவிடுவான். அவன் வேகமாக நடப்பான். வேட்டை தேடிச் செல்லும் நாயின் பின்னலேயே போவான். அவன் வேகமாய் சுடுகிறவனும் கூட. ஒரு பறவை நமது பக்கத்தில் அருமையாக மேலெழும். அது வசமாக வரட்டும் என்று நாம் காத்திருப்போம். நாம் அதைச் சுடப் போகிற தருணத்தில், போவ்!, ஜோவின் துப்பாக்கி வெடிக்கும். பறவை விழுந்துவிடும். ஏனெனில் ஜோ நேர்த்தியாகச் சுடக் கூடியவன்,

நான் சில தடவைகள் ஜோவுடனும் தாத்தாவுடனும் போனதுண்டு, சுடுவதற்காக அல்ல. காடை வேட்டையின் போது இரண்டு துப்பாக்கிகளுக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது என்பது தாத்தாவின் திடமான கருத்து. சுடாதபோது கூட, கம்மா ஜோவைக் கவனித்தபடி இருப்பது, காட்டுத் தீயில் சிக்கிய நரி மாதிரி, எனக்கும் பரபரப்பு தந்தது. நாய்களுக்கும்