பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடமும் அக்டோபரும்

சிரமப்படாமலும் இஷ்டம்போல் திரிந்து காட்டில் பார்க்கக் கூடியதை எல்லாம் நாங்களும் பார்க்க முடிந்தது. நாலரை மணிக்குக் காருக்குத் திரும்பிவிடுவது என்று எண்ணிக்கொண்டு, மூன்று மணிக்கு வேட்டையாடப் போவதில்-நாளின் சிறந்த பகுதியை வீணுக விடுவதில்-ஒரு இன்பமும் இல்லை.

இந்த ஜோ என்பவன், சிறு சிறகு மூட்டை ஒன்று விழுவதைக் காண வேண்டும் என்ற பேராசையோடு அவசரப்பட்டதன் மூலம், வேட்டையின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் இழந்துவிட்டான் என்றே பிற்காலத்தில் எனக்குத் தோன்றியது. நீ பையில் எவ்வளவு வீட்டுக்கு எடுத்து வருகிறாய் என்பது வேட்டையின் முக்கியத்துவம் ஆகாது ; அதில் நீ என்ன முதலீடு செய்தாய்முதலில் நீ ஈடுபடுத்துவதற்குப் பிரதியாகக் கிடைக்கும் சிறு ல்ர்பத்தில் உனக்குத் திருப்தி ஏற்படுகிறதா-என்பதுதான் முக்கியம் என்று தாத்தா சொன்னர்.

இல்லையெனில், உனக்காக நீ ஒரு காடைப் பொறி அமைத்து விடலாம். அல்லது சி ல டாலர்களைக் கொடுத்து, மொத்த வேட்டைக்காரர்களில் எவனிடமாவது நிறைய வாங்கலாம். வெள்ளைக் காடையில் போதுமான இறைச்சி கிடைக்காது. அதற் காக, ஊறுகாய்ப் படகில் வந்த வில்லி என்னை அழைத்தான்ே அப்படி உன்னை நீயே மாற்றிக்கொள்வதில் பயனில்லை. மிகவும் குறைவான பறவைகளோடும், காட்டில் நல்ல பொழுதை அனு: பவித்த நிறைவோடும் வீடு திரும்புவதையே நான் என்றும் விரும்பு வேன் ’’ என்று அவர் கூறினர்.

தாத்தா விசித்திரமானவர்தான். இந்நாட்களில் அவரைப் போன்றவர்கள் அதிகப்பேர் இருக்க வேண்டும் என நான் விரும்பு கிறேன். அவ்வாருயின் நம்மிடையே பறவைகளும் அதிகமிருக்கும்.

பள்ளிக்கூடமும் அக்டோபரும்

அந்நாட்களில் மது விலக்கு உண்டு. அதனல், பழுப்பு நிற அக்டோபர் ஏல் மது எப்படி ருசிக்கும் என அறிய என்க்கு வழி இல்லாது போயிற்று. ஆனல் அம் மாதத்துக்குச் சிறப்புத் தரும் வேறு பல விஷயங்கள் இருந்தன. பள்ளிக்கூடத்தையும், மீண்டும் பாதரட்சை அணிவது பற்றியும் நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் அக்டோபர் வருவதற்குள் ஆறு மணி நேரச் சித்திரவதை நமக்குப் பழகிவிடும் : பாதங்களும் வேதனே தருவதை விட்டிருக்கும்.