பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

அக்டோபர் என்பது எனக்கு எத்தனையோ விஷயங்கள் கொண்டது. சிப்பிப் புழுக்கள் மறுபடியும் வளமாகிவிடும். மரங் களில் இலைகள் போதுமானபடி உதிர்ந்துவிடும் ; எனவே அங்குள்ள அணில்களை நன்கு காண முடியும். பெரும் மீன்கள் வரத் தொடங்கும். முதல் உறைபனி தலைகாட்டும். அதன் விளைவாக, மாலை வேளைகளில் நெருப்பு இனிய உணர்வு தரும். அக்டோபர் விந்து விட்டதென்றால், பறவைகளின் காலம் துவங்குவதற்கு அதிக நாள் இல்லை என்றே அர்த்தம். நன்றி அறிவிப்பு நாள் கொண்டாடி முடிந்தது என்றால் கிறிஸ்துமசுக்கு நாம் ஆயத்தம் செய்து விட்டதாகவே கொள்ளலாம்.

அன்று இனிய, ஒளி நிறைந்த சனிக்கிழமைகளில் ஒன்றாகும். மழை அன்று பெய்வதற்கு மறந்து விட்டது. மழையைப்பற்றிப் பேசும்போது, ஒரு விஷயம். பள்ளிக்கூடம் உள்ள ஐந்து நாட் களிலும் சூரியன் தவருது பிரகாசிப்பதையும், பையன் ஒருவன் படிப்பிலிருந்து விடுபட்டு, சனிக்கிழமையின் போது கிடைக்கும் ஒய்வு நேரத்தில் பயனுள்ள எதையாவது செய்யலாம் என்று திட்ட திட்டால் அன்றைக்கென்று மழை பொழிவதையும் நீர் கவனித் திருக்கிறீரா?

எவ்வாரு யினும், அன்று ஒளி நிறைந்த அருமையான சனிக் கிழமைதான். அல்லது, அந்நாள் பூராவும் அப்படி அமையும் என்று தோன்றியது. செக்கச் செவேரென மேலெழுந்த சூரியன் பொன் மயமாய் மாறி வந்தது. லேசான உறைபனி, பழுப்பாகி வரும் புல்களின் மேல் வெண்மையாய் படிந்து நின்றது. மரங்கள்ை அசைக்கச் சிறு மென்காற்றுக்கூட இல்லை. தாத்தா காரை நிறுத்தி விட்டார். நாங்கள் மரக்கட்டை ரஸ்தாவில் நடந்தோம். எங்களுக்குத் தெரிந்த பெரிய ஹிக்கரி மரத் தோப்பு நோக்கிச் சென்றாேம். எங்களிடம் 22 துப்பாக்கிகள் இரண்டு இருந்தன. ஜேக்கி எனும் நாயும் எங்களோடு வந்தது. கலப்பு ஜாதி அது. அதன் வள்ைந்த வால் மேல் நோக்கிச் சென்று, தோள்பட்டை மீது படியும்படி தொங்கியது. அழுக்கு மஞ்சள் நிறம் பெற்ற அதற்கு நரி முகம். அது வேட்டை நாய்போல் கத்துவதாக எவரும் குற்றம் சாட்ட முடியாது. ஆளுல் மற்ற எல்லா நாய்களையும்விட ஜேக்கி சிறப்பாகச் செய்யக்கூடிய காரியம் ஒன்று உண்டு. மரத்திலோ, அல்லது தரையில் கிடக்கும் கொட்டைகளைத் தின்றபடியோ, ஒரு அணில் இருந்தால், ஜேக்கி அதைக் கண்டுவிடும். அதைப்பற்றி, கோபம் கொண்ட பெண் ஒருத்தி சண்டையிடுவதுபோல், மெலிந்த கீச்சுக் குரலில் எடுத்துச் சொல்லும்,

- மோசமான வளர்ப்பின் சிறந்த தயாரிப்பான இதைச் சிறிது நேரம் ஒரு மரத்தில் கட்டி வைப்போம். எல்லா அணில் களும் மரத்திலேயே இருக்கின்றன. அவை தரைக்கு வரும் வரை நமக்கு நிபுண உதவி எதுவும் தேவையில்லே. அவை இருக்கும் நிலையிலேயே நாம் வேட்டையாடலாம். அவற்றைப் பார்ப்ப்த|ற்கு