பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடமும் அக்டோபரும் 7

வசதியாக இலைகள் உதிர்ந்துள்ளன என்றே நினைக்கிறேன் ‘ என்று தாத்தா சொன்னர். ‘

நாங்கள் ஹிக்கரித்-தோப்பை அடைந்தோம். அது இடுகாடு. மாதிரி அமைதி நிறைந்திருந்தது. . அணில் வேட்டைக்கு அருமையான காலை நேரம். காற்றில் அவற்றை வேட்டையாடுவது கால விரயம்தான். அவை அதிக மாக நகருவதுமில்லை ; அதிகம் தின்பதுமில்லை. அமைதியோடிரு. நாம் மெதுவாக நடந்து, அந்தப் பெரிய ஹிக்கரி மரத்தடியில் அமர்ந்து, என்ன நடக்கிறது என்று கவனிப்போம். உஷ்ஷ்’ என்று தாத்தா மென் குரலில் பேசினர். .

மரத்தின் ஒரு பக்கம் தாத்தாவும், மறுபுறம் நானுமாக உட்கார்த்தோம். தோப்பு முழுவதும் அணில்கள் பேசுவது கேட்டது. சிர்ர் என்பது கிட்டத்தட்ட அவை எழுப்பும் ஒலியை ஒக்கும். அதே ஒலியை, நமது வாயினுள்டே, பக்கவாட்டில் நாக்கை அசைப்பதன் மூலம் நாம் எழுப்பமுடியும். இக்காலை வேளை யில் ஏராளமான செயல்கள் நிகழ்ந்தன. தோப்பு நெடுகிலும் அவை சத்தமிடுவதைக் கேட்க முடிந்தது. கொட்டைகளைக் கடித்தபோது அவற்றின் பற்களின் ஒசை எழுந்தது. பெரிய அணில் ஒன்று மரம் விட்டு மரம் தாவியதால் இலைகளில் சிறு சலசலப்பு அவ்வப்போது கேட்டது. அது விட்டுச் சென்ற கிளை தாழ்ந்து எழுவது தெரிந்தது. .

என் பின்னே தரையில் சிர்ரொலியும், கிளிக் ஒசையும் கேட்டேன். தாத்தா தான் அணில் மொழி பேசினர் என் அறிந் தேன். அவர் துப்பாக்கி லேப்டியினல் கிளிக் எனும் ஒசை எழுப் பினர். தான் கடிக்கும் கொட்டையின் அளவு பற்றி அணில் பெருமையடிப்பது போல் அது ஒலித்தது. வெகு விரைவிலேயே எனக்குச் சற்று தொலைவில் வலது புறத்தில் ஒரு மரத்தின் கிளே களில் அசைவு ஏற்பட்டது. நான் சிலை மாதிரி அசையாதிருந் தேன். மேலும் கொஞ்சம் அசைவு நிகழ்ந்தது. பிறகு ஒரு கவடு அருகே ஒரு தலை நீண்டது. நான் தலையை மட்டுமே காண முடிந்தது. ஆளுல் அது கருமையும், வெண்மையுமாய் மிளிர்ந்தது. அது நரி அணிலாகத்தான் இருக்கவேண்டும்.

மெதுமெதுவாக ஒரு வால் ஆடக்கண்டேன். பிறகு, முதிர்ந்த நரி அணில் அடிமரத்தைச் சுற்றி வழுக்கி வந்தது. மரத்தோடு அப்பி தட்டையாகத் தென்பட்டது. அது மரத்தை நன்றாகச் சுற்றி, அதன் முதுகுப் புறம் எனக்கு நேரே வரும் வரை காத்திருந்தேன். அது எதிர்த்திசையில் எட்டிப்பார்த்தது. நான் துப்பாக்கியை மிக மெதுவாக உயர்த்தினேன். அதன் முதுகில் தோள்களுக்கிடையே குறி பார்த்துச் சுட்டேன். குண்டு மந்த ஒலியுடன் தாக்கியது. அணிலார் ஒரு பாருங்கல் போல் கீழே விழுந்தார். தடாரெனக் கீழே விழுந்த அது இருமுறை கால்களை உதறியது. செத்தது. கிழ அணில் கிடக்கட்டும். ஒரு மனிதனைக்