பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடமும் அக்டோபரும்

சகல அளவிலும் குழந்தைகள் சிறு வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தார்கள்.

ஏப்னர் உத்திரவிட்டார் : உட்ரோ வில்லன், நீ போய்க் கத்திகளை எடுத்துவா ஹார்டின், நீ அம்மாவிடம் போய் நான் நெருப்பு மூட்டச் சொன்னதாகச் சொல்லு. பன்றி சமைக்கும் பானையில் தண்ணீரைக் கொதிக்க வைக்கட்டும். கேப்டன், நீங்கள் அதோ அந்த சிங்கி பெசி மரத்தடியில் சும்மா உட்கார்ந் திருங்கள். பிள்ளைகள் அணில்களைக் கவனிப்பார்கள். போன வாரம் நான் கண்டெடுத்த ஒரு சரக்கை நீங்கள் கொஞ்சம் ருசி பார்க்கலாம், கேப்டன். சிறிது ஸ்கூப்பர்நங் ஒயினே விழுங்கி சின்னக் கேப்டன் தன் தொண்டையை குளிரவைக்கலாம். என்ன சொல்கிறீர்கள் ?”

அதைவிடச் சிறந்த யோசனை எதையும் தான் சொல்வதற். கில்லை என்று தாத்தா கூறிஞர். நாங்கள் நிழலில் அமர்ந்தோம். ஏப்னர் அரை காலன் ஜாடி நிறைய வெண் பானமும், அதே மாதிரி ஜாடியின் அரைவாசிக்குக் கறுப்பு பானகமும் கொண்டு வந்தார். வெண்பாணம் கிணற்றிலிருந்து எடுத்து வந்த இனிய குளிர்நீர், கருமையான திரவத்தில் சக்தி அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தாத்தா அதைக் குடிக்கையில் கண்களை மூடிக்கொண்டார்; அவர் உடல் முறுக்குற்றது. அவர் புறங்: கையால் தன் மீசையைத் துடைத்தார்.

இவ்வருஷம் பறவைகள் எப்படி இருக்கின்றன, ஏப்னர் ?” என்று கேட்டார்.

இவ்வளவு காடைகளை நான் என் ஜன்மத்தில் பார்த்ததே யில்லை. பட்டணத்தான் ஒருவன் அன்ற்ைக்கு இங்கு வந்தான்.

வேட்டையாடும் உரிமைக்காகப் பணம் தர விரும்பினன். ஆளுல் நான் பறவைகளை எல்லாம் எனது வெள்ளை உறவினருக்காகப் பாதுகாக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் ‘’ என ஏப்னர் பதிலளித்தார்.

தாத்தா என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினர். எங்கள் இரு டஜன் அணில்களும் தோலுரித்து, குடல் நீக்கப்பட்டு, கழுவி செம்மையாய் சாக்கிலே வந்து சேருவதற்கு வெகுநேரம் பிடிக்க வில்லை.

நாங்கள் போகலாம் என்று நினைக்கிறேன், ஏப்னர், ரொம்ப நன்றி. குட்-பை ‘’ என்று தாத்தா சொன்னர்.

ஏப்னர் குட்-பை கூறினர். பிள்ளைகள் கைகளே ஆட்டினர். தாத்தா காரை மெதுவாக முற்றத்துக்கு வெளியே ஒட்டிஞர்: என் பக்கம் திரும்பி, மறுபடியும் கண் சிமிட்டினர். பூனேயைக் கொல்வதற்கு, நிறைய வெண்ணெயைத் திணித்து அதைச் சாகடிப்பதைவிட, வேறு பல வழிகளும் உண்டு ’’ என்றார்.

நான் சதா சாப்பாடு பற்றியே எழுதிக்கொண்டிருப்பதால், எனக்கு உணவில் அதிகமான் பற்றுதல் உண்டு என்று நீங்கள்

| 1