பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடமும் அக்டோபரும் - 5

தீயினால் தாக்குண்டு விருப்பமின்றி ஜவ்வுகளைத் தளரவிடும் சிப்பிப் புழுக்கள் பொரிபடும் சுகந்தம் இவைகளைப் போலவே சின்னப் பையனும் பொரியல் விருந்தின் ஒரு பகுதிதான். அவனே விலக்குவ தாளுல், துரத்து ஆந்தை அலறும் ஒசையையும், அலைகளின் மத்த மான் பூம்’ ஒலியையும், கடலோர வெண்மணலின் ஈரவாடையை யும், மணல் குன்றுகளிலிருந்து நீர் ஒரம் வரை வளர்ந்து கிடக்கும் கடல் ஒட் பயிரின் சலசலப்பையும் அகற்றி விடலாமே.

இன்னுமொரு விஷயம்-சொல்லப் போனுல், இரண்டு விஷயங் கள்-உண்டு. ஒன்று, தனது சிப்பிகளைத் தானே திறப்பவன், வெண்ணெயில் தோய்ப்பதற்கு முந்தி ஒரு டஜனத் திறந்தாக வேண்டும் என்று மன உறுதியோடு வேலை செய்ய முடிவதில்லே. மற்றாெரு விஷயம், எந்த வெள்ளேயர் மிக அதிகமான சிப்பிகனேத் தின்பார் என்று போட்டியிட்டு நீக்ரோப் பையன்கள் தங்கள் இரவு நேரக் கூலியைப் பந்தயம் கூறுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பை அவன் கெடுத்துவிடுகிருன். தனக்காகச் சிப்பிகளைத் திறப்பதற்குச் சிறுவன ஏற்பாடு செய்கிற ஒருவன், தன்னையே சிப்பிப் புழுக்களால் மூழ்கடிக்க வேண்டியது அவசியம். இல்லை யேல், அவனுடைய உதவியாளுக்கு ஏகப்பட்ட பணம்-ஐம்பது சதங்கள் கூட-நஷ்டமாகும். பையன்கள் ஒத்துப்பார்க்கச் சிப்பி ஒடுகளைச் சேமிப்பர். என் பசி மீது பந்தயம் கட்டியவர்கள் அபூர்வ மாகவே பணம் இழந்தனர்.

சாப்பாட்டில் பிரியம் காட்டும் இந் நிகழ்ச்சியில் ஒருவிதக் கலை நய அழகு இருந்தது-நெருப்பின் சுவாலே, ஏற்கனவே சிவந்த சமையல்காரர்களின் முகங்களை மேலும் செம்மையாக்கியது ; நீக்ரோச் சிறுவர்களின் கறுப்பு முகங்களிலும் வெள்ளை விழிகளிலும் மினுமினுத்தது ; சாப்பிடுவோரின் விரல்களிலும் உதடுகள் மீதும் நெய்ப்பசையோடு பிரகாசித்தது ; அரைகுறையான கூடாரத்தில் விபரீதமான நிழல்களைப் பரப்பி ஒளி வீசியது ; காற்றில் அலைப் புறும் கோணலான மரங்களைக் கொண்டு கோரமான நிழல்களைச் சித்தரித்தது. பொரியல் விருந்துக்குப் போகும் பாதை எப்போதும் மினுமினுக்கும் சிப்பி ஓடுகளின் நொறுங்கல்களாலேயே பரவப்பட்டிருந்தது. அதுவே பொருத்தமாகத் தோன்றியது. அதன் பக்கங்களில் எலும்புபோல் வெளுத்த சிப்பிக் குவியல்கள் உயரமாகக் காட்சி தந்தன.

இதுதான் விடுமுறை நாளில் நிகழும் கூட்டுக்கல்வியின் திறந்த வெளி நிலைமையாகும். -

ஆண்கள் அதிக அந்தரங்கமாகவும் ஒழுங்கற்ற முறையிலும் செய்யும் சமையல் வேலை இரண்டு மூன்று நாள் வேட்டை யாத் திரையின் போது நிகழும். வாத்துக்களை அல்லது மான்களை வேட்டையாடச் செல்லும் பணக்காரர்கள் சிலர் தங்களோடு ஒரு சமையலாளையும் இட்டுச் சென்றனர். அக்காலத்தில் கரோலின நீக்ரோவர்களிட்ையே ஒரு தொழில் நிலவியது. வேட்டைக்குப்