பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடமும் அக்டோபரும் - 169

நேர்த்தியானது எதற்காகவாவது வேட்டையாடினுல், உனக்குப் பெருமைதரக்கூடியது, அந்த நாளின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உன் நினைவில் நிறுத்தக்கூடியது எதையாவது கண்டு கட்டால், அது நல்லது ஆகும். . . நான் மிகுதியும் வெறுக்கும் ஒன்று உண்டு எனில், அது கொலையாளிதான் , தன் கண்ணில் படுகிற ஒவ்வொன்றையும் சுட்டுத் தள்ளுகிற, ரத்த வெறி பிடித்த மடையன்தான். த்துக்காக் மட்டுமே மரணத்தில் இன்பம் காண்கிற ஒருவன் த்தில் எங்கோ கோளாறு உடையவனே யாவன் ; அவன் பிற்காலத்தில் இதை நிரூபிக்கும் விதத்தில் செயல் புரிவதை நாம் காணலாம். எல்லாச் சிறுவர்களும், மேஜைகளைக்கத்தியால் செதுக்கவும், ஜன்னல் கண்ணுடிகளே நொறுக்கவும், பரிகாசப் பறவைகளைக் கொல்லவும் ஆசை கொள்ளும்போது, இதன் முதல் அவஸ்தையை அனுபவிக்கிரு.ர்கள் என நான் உன்றாகிறேன். ஆளுல் நீ அதிலிருந்து விடுபட்டு வளரும்படி நான் கவனிப்பேன். இல்லையெனில், உனது பின்பக்கத்தின் கடைசித் துணுக்குத் தோலைக் கூட உரித்து விடுவேன்.

இன்றிரவு நீ படுக்கச் சென்றதும் விழித்திருந்து இதைப் பற்றி எண்ணிப்பார். வெகு அழகாகப் பாடிய பரிகாசப் பறவை, உன் பாட்டி நேசித்தது. பற்றி எண்ணு. பிறகு, பூனைகூட விரும்பாத, ஆசிங்கமான சிறகுகளின் சிறு குவியல் பற்றி நினை. அப்புறம், நீ சுடக் கற்றுக்கொள்வதற்கென்று, உனக்குக் கிறிஸ்துமஸ் பரிசாகக் கிடைத்த இந்த அழகிய சிறு துப்பாக்கி பற்றியும், அது மீண்டும் உன்னிடம் இருந்தால் எவ்வளவு நன்முக இருக்கும் என்றும் நினைத்துப் பார். ‘

இதைச் சொல்லிவிட்டு, தாத்தா சிறிய டெய்ஸியை எடுத்து, தன் முழங்கால்மீது வைத்து முறித்தார். பரிகாசப் பறவையின் உடலை அவர் வீசியிருந்த புதருக்குள்ளேயே அதையும் விட்டெறிந்தார். அது தான் முதல் பாடம். -

எனது முதலாவது சுடுதுப்பாக்கியை அடைவதற்கு முன் நான் மிகுந்த மனவேதனை அனுபவித்தேன். காடைகளைச் சுடக் கற்றுக் கொள்வதற்காக தாத்தா என்னை வெளியே அழைத்துச் சென்ற போது, ஒரு பறவைக் கூட்டத்தில் அடுத்த வருஷமும், அதற்கு அடுத்த வருஷத்திலும் சுடுவதற்குப் போதுமான காடைகள் மிஞ்சியிருக்கும்படியாக இப்பொழுது ஒருவன் எத்தனை பறவை கள்ைச் சுடலாம் என்பது பற்றிய விதியை எனக்குப் படிப்பிப்பதில் அவர் அதிக நேரம் செலவு செய்தார். பறவைகள் நன்கு சிதறிக் கிடப்பதைக் க ண் ட து ம், பெரும்பாலான சிறுவர்களுக்கு ஏற்படுவது போலவே, என் எண்ணமும் அமைந்தது : நாய்கள் சுட்டிக்காட்டும் வரை அனைத்தையும் சுடவேண்டியது என்றுதான். ஆயினும் அவர் பாடம் எனக்கு நன்கு பதிந்தது. ஏனெனில் அக் காடைகளும் தாத்தாவும் நீண்ட காலமாக நண்பர்கள். அவர்