பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடமும் அக்டோபரும் #71

கிறேன். இனிய பிரெஞ்சுக் கறிவகைகளைவிட முயல் துவட்டல் தான் மிக இனிமையாய் எனக்கு ருசிக்கிறது. பெரியவர்க்ளை அத்தை, மாமா என்றும், நடுத்தரமானவர்களே அவர் களது பெயரைச் சொல்லியும் நான் அழைத்தேன். அவர்கள் தாத்தாவை காப்டன் ‘ என்றும், என்னை இளைய காப்டன் : அல்லது மிஸ்டர் பாபி ‘ என்றும் அழைத்தார்கள். விசேஷ அடிமைத்தனம் எதுவும் அங்கு கிடையாது. தாத்தா எப்பவும் சிரித்து, தமாஷ் பண்ணினர். அவர்கள் சதா என்னைக் கேலி செய்தனர். குடி டப்பா, ஸ்கவுட் கோடரி, என்னளவு உயர மிருந்த ஒரு துப்பாக்கி ஆகியவற்றை எல்லோரும் சுமப்பது வழககம். -

நரையும் கூனலும் பெற்றிருந்த கிழ அத்தை சில சமயம் சொல்லுவாள் காப்டன், அன்றைக்குப் பட்டணத்து அந்நியன் ஒருவன் பறவை பிடிக்கும் நாய்களோடு வந்தான். என்னிடம் வந்து, என் தோட்டத்தில் பறவைகள் அகப்படுமா என்று கேட் டான். கிடையாது ஐயா. சென்ற வசந்த காலத்தில் பெரு மழை பெய்ததிலிருந்து இங்கே ஒரு பறவை கூட இல்லை. எல்லாம் மழையில் மூழ்கிச் செத்துப்போயின. மேலும், இந்த இடம் காவலுக்கு உட்பட்டது. எங்கள் பன்றிகளே எல்லாம் கட்டாமலே காட்டில் திரிய விட்டிருக்கிருேம் என்று நான் சொன்னேன். வழியோடு போகும் அந்நியன் எவனும் உங்கள் பறவைகளைச் சுட்டுக்கொல்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். இது எனக்குத் தெரியும். அதனுல் நான் அவனே அனுப்பிவிட்டேன்.’

பிளாரன்ஸ் அத்தையின் சிறிய பண்ணையைச் சுற்றிலும், பொது நிலத்தில், காடைக் கூட்டங்கள் மிகுதியாக இருந்தன. அதனல், பறவைகள் அவள் தோட்டத்திற்குள் வராது தடுப்பதற் காக அவள் வேலி அமைக்க வேண்டியதாயிற்று. ஆளுல், மரம் வெட்டுவதற்குரிய குத்தகைக் காட்டுக்கும், சதுப்பு நிலத்துக்கும் அவள் தோட்டம் வழியாகத்தான் போகவேண்டும். அந்நியர்ான வெள்ளையரைக் கண்டால் உக்கிரமாகக் குரைக்கும் நாய்கள் புடை சூழ இருந்த அவள் வெகு மூர்க்கமாகக் காட்சி அளிக்க முடிந்தது.

அல்லது, ஆறடி நான்கு அங்குல உயரமுள்ள பெரிய ஏப்னர் மக்காயைக் காணச் செல்வோம். அவருக்கு நிறையக் குழந்தைகள் உண்டு. அவர் பல்லீறு எல்லாம் தெரிய, கோரமாகச் சிரித்தபடி சொல்லுவார் : காப்டன், பழைய சர்ச் அருகேயுள்ள பறவைக் கூட்டத்தை விட்டு விலகியே போங்கள். அங்கே ஒரு மந்தை நரிகள் பதுங்கியிருந்து, உங்கள் காடைகளையும் என் கோழிக் குஞ்சு களையும் தின்று வருகின்றன. அதனுல் அங்கு நான் பைன் இலைகளை விட நெருக்கமாகக் கண்ணிகள் வைத்திருக்கிறேன். அவற்றில் உங்கள் நாய்களில் எதுவாவது சிக்கிவிடக்கூடாது. - - ---

ஆனல் அன்றைக்கு, அந்தப் பழைய இடுகாட்டுக்கு அப்பால், இடுகாட்டுக்கும் பழைய மரத்துரள் குவியலுக்குமிடையில், நான்