பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 . தாத்தர்வும் பேரனும்

புரியும். அதஞல் அதில் துரு ஏருது. சுத்தம்செய்ய அதைத் தனித்தனிய்ே பிரிக்க வேண்டுமாதலால் பிறகு அதை அதன் பெட்டியிலேயே வைத்துவிடலாம். • . . -

தாத்தாவுக்குப் டைத்தியம் போலும் ! நீங்கள் T6 லாம். அன்று நான் இவ்விதமே எண்ணினேன். இப்போது அப்படி இல்லே. ஒரு துப்பாக்கியால் எல்லாம் ஏற்படும் என நான் கண்டுகொண்டேன். நானறிந்த ஒருவன், டானியல் பூன் மாதிரி, தன் துப்பாக்கி வாய்மீது கைகளை வைத்து நிற்பது வழககம, ஒரு நாள் ஏதோ நடந்தது; துப்பாக்கி வெடித்தது. அபபுறம அவனுக்குக் கைகளே இல்லாது போயிற்று. அதனுல் அவனுக்கு அசெளகரியம் தான். - - . .

குண்டுகள் அகற்றப்படாத துப்பாக்கிகளைக் குடியர்கள் சேட்டை செய்வதையும், வீட்டினுள்ளேயே அவை வெடிப்பதை பும், எல்லோரும் அறிவுத்தெளிவு பெறுவதையும் நான் கண்டிருக் கிறேன். ஒரு நாள் வாத்து வேட்டையின் போது, இயந்திரத் துப்பாக்கி ஒன்று தறிகெட்டு, தன்னுள்ளிருந்த குண்டுகள் அனைத் தையும் விட்டெறிந்தது. நான் வழக்கம்போல் அதை ஆள் இல்லாத பக்கம் நோக்கிப் பிடித்திருந்தேன். இல்லையெனில் என் தோழனின் தலை துண்டாகியிருக்கும். குண்டுகளே எல்லாம் அகற்றிவிட்ட நினைப்பில் கையாண்ட துப்பாக்கியால் ஒருவன் தன் காலேயே சுட்டுக்கொள்வதற் கிருந்தான். இன்னொருவன் மான் வேட்டையின் போது, ஒரு மான் ஒடி மற்ைந்த புதருள் சுட்டதை பும், அதன் மூலம் தன் அருமை நண்பனின் மனைவியை விதவை வாக்கியதையும் நான் கண்டதுண்டு.

தாத்தா மூன்று வருஷகாலம் என்னைக் குறை கூறி இடித் துரைத்தார். ஒரு முறை நான் மறந்துபோய், கெட்டித்த துப் பாக்கியோடு வேலி மீது ஏறினேன். அவர் ஒரு கம்பை எடுத்து என்ன அடிக்க வந்தார்.

  • ” துப்பாக்கிகளையும் வேலிகளையும் பற்றி நான் சொன்னதை நினைவு வைத்துக்கொள்ள உனக்கு வயது வரவில்லையானல், நீ அடிபடாமல் இருக்கவும் பெரியவளுகிவிடவில்லை. இது உன் உடலே

ணுக்காவிடினும் உன் உணர்வை பாதிக்கும்’ என்றார் அவர்.

ப் பதினுேரு வயதானதும், தாத்தா என் 20 கேஜ் யைத் திருடிக்கொண்டார். அவர் ஒரு தினுசாகச் , தான் உண்மையான இந்தியக் கொடையாளி என்றார். குழப்பமுற்றேன். ஆயினும் அதிகமாக இல்லை. ஏனெனில், தா விசித்திரப் பேர்வழி. கள்ளத்தனம் பெற்றவரும் கூட.

  1. நான் படுக்கை அறைக்குப் போனேன். படுக்கைமீது 16 கேஜ் இரட்டைத் துப்பாக்கியும் தோல் பையும் இருந்தன. அதில்

என் பெயர் காணப்பட்டது. துப்பாக்கியின் இருபுறங்களிலும் காடைகள், நாய்கள் ஆகியவற்றின் சித்திரங்கள் வெள்ளியில் உதிக்கப்பட்டிருந்தன. என் பெயர் வெள்ளித்தகட்டில் மின்னியது.