பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை }

உதிர்ந்து பொடியாகும் தன்மை பெற்றிருந்தது. களிமண்ணே மெருகிடும் விதத்தை நான் அறியவில்லை. அப்புறம், நான் வர்ணங்களால் தீட்டிய பயங்கரமான படங்கள் சில இருந்தன், பறவைகள், நாய்கள், மான்கள் எல்லாம் எப்படிக் காட்சி அளிக்க வேனும் என் நான் நினைத்தேனே, அப்படி வரைந்திருந்தேன். எனது வல்லுறு வீட்'டின் கரடுமுரடான பலகைச் சுவர்களில் அவற்றைத் தொங்கவிட்டிருந்தேன். பச்சைத் தோல்கள்-நன்கு உலர்ந்து கடினமான முயல், அனில் தோல்கள்-சிலவற்றைத் தரைமீது சமுக்காளமாய் பரப்பியிருந்தேன்.

இம் மர வீட்டில் ஒரு படுக்கையும் உண்டு. வளைந்த கிளைகளில் பைன் கொம்புகளே பச்சைத் தோலால் சேர்த்துக் கட்டியிருந்தேன். ஒரு அடுப்புகூட இருந்தது. குப்பை மேட்டிலிருந்து எடுத்த பழைய இரும்புகளைக் கொண்டு அதை அமைத்தேன், தின்பதற்கு அருகதையுள்ள எதையும் எவரும் அதில் ஆக்கிவிட முடியாது.

நான் செய்து, தகரத்தால் கூர்முனே கட்டிய ஈட்டிகளும், ஹிக்கரி மரத்தில் செய்த வில்லும், ஒரு துரணி நிறைய அம்புகளும் இவ் வீட்டில் இருந்தன. புத்தக அலமாரியும் இருந்தது. ராபின் ஹூட், எர்னஸ்ட் தாம்ஸன் nட்டன் எழுதிய காட்டிலே ரோல்ப்,” இரு சிறு காட்டுமிராண்டிகள், ஏகப்பட்ட டார்ஸான் கதைகள், பஃபலோ பில், டிரஷர் ஐலண்ட் போன்ற புத்தகங்களே அதில் நிறைந்திருந்தன. ஸ்ர் வால்டர் ஸ்காட் எழுதியவையும் இருந்தன. நான் கண்டெடுத்த அம்பு முனைகளும், வழக்கமாகப் பிறர் பாராதபோது எந்தச் சிறுவனும் சேர்த்துவைக்கும் துண்டுத் துணுக்குகளும்-கிளிஞ்சல்கள், பெரியவர்கள் பார்த்தால் சிறு பிள்ளைத்தனம் என்று பரிகசிப்பார்களே என்பதற்காகப் பதுக்கி வைக்கும் ரகசியப் பொருள்கள் எல்லாம் - இருந்தன. எனது சரக்குகளை நான் தாத்தாவிடம் காட்டியபோது துணிந்தே செய் தேன். உண்மையில் நான் கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை.

அவர் ஒலி எழுப்பியவாறு படிகள் மூலம் மரத்தின் மேலேறி ஞர். வல்லுறு வீட்'டின் பலகைகளோடு சேர்த்து அமைத் திருந்த நாற்காலி போன்ற ஒன்றில் அமர்ந்தார். சற்றே நெடு மூச்செறிந்தபடி, புகையிலையைத் தன் குழாய்க்குள் திணித்தார். பிறகு, ஒவ்வொன்றையும் கவனித்தார். ஒரு சமயத்தில் ஒரு கேள்வியாக, அந்தப் பொருள்களை நான் எப்படி அடைந்தேன், ஏன் அவற்றைச் சேர்த்தேன், முக்கியமாகச் சிற்பவேலே சம்பந்த மாக நான் எப்பொழுதாவது ஏதாவது படித்தேனு என்று கேட் டார். களிமண்ணில், மெருகிடாத விதத்தில் அவரைப்போல் நான் செய்திருந்த கோர உருவத்தில் அவர் தன்னைக் கண்டு கொண்டார்.

அலமாரியிலிருந்து அவர் புத்தகங்களை எடுத்தார். பணி வுடன் எடுத்ததாகவே நான் நினைத்தேன். மோசமாய் பதனிடப் பட்ட தோல்களைத் தடவினர். படுக்கையின் துள்ளலைப் பரி