பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை

என்று தாத்தா கூறுவது வழக்கம். அவற்றில் எதுவும் எளியது அல்லதான். -

கோடைகாலம் பூராவும் தாத்தா மிகுந்த கோபத்தோடு இருந்தார். ஏனெனில் கடற்கரை எல்லாம் ஓய்வு நாடும் நீக்களால் நிறைந்திருந்தன. அதை அறிந்த நீல மீன்கள் கரை ஒரத்துக்கு வராமலே இருந்தன, எங்கள் முக்கிய மடுக்களில் எல்லாம் நீச்சல் பயில்வோர் நீரை அடித்து இரைச்சலிட்டபடி காணப்பட்டனர். குடாக்களில் அலைமேல் வல்ே வீசலாம் என்று இரவிலே போனல் காதல் புரிவோரிடையே வழி தேடித் திரிய நேரிடும்.

தொழிலாளர் தினம் தான் வருஷத்திலேயே சிறந்த திரு தாள். அது முடிந்ததும், நகர மக்கள் அனைவரும் வீடு திரும்புவர். தண்ணீரை தொழிற்காரர்களுக்கே விட்டுவிடுவர். தொழிற் காரன் என்பவன், மீன் பிடிப்புக்கென்று போகிறபோது, நிஜ ாைகவே மீன் பிடிக்கும் அடுமடையன்தான் ‘ என்று சொல்வி, தாத்தா பல்லிளித்தார். அதை விஸ்கி விருந்தாகவோ, போக்கர் விளையாடுவதற்கு ஒரு சாக்காகவோ அவன் மாற்ற மாட்டான். இவ்விரண்டில் எதையும்-அதன் ஒழுங்கான முறை யில் அது கையாளப்பட்டால் - குறைவாக நான் கருதவில்லை.”* என்றா:ா.

தாத்தாவின் உணர்ச்சிகள் சில என்னிடம் படிந்திருந்தன. செப்டம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் வரும் வரை காத்திருப் பது எனக்குக் கஷ்டமாயிருந்தது. அப்பொழுதுதான் கடற்கரை ஆட்களின்றி சுத்தமாக விளங்கும். கோடை அதிதிகள் அனை விரும் தங்கள் மூட்டைகளோடு நகர் திரும்பியிருப்பர். இன்னும் ஒரு வருஷத்துக்கு வரமாட்டார்கள். இதன் பிறகு-இதன் பிறகு மட்டுமே-முரட்டுத்தோலர்கள் வெளிப்படுவர். வருஷம் முழுவ தும் திரிகிற கடலோர உரிமையாளர்கள் அவர்கள் தான். பயங் கரமான, நரைத்த முடிபெற்ற, அனுபவம் முதிர்ந்தவர்கள். அலைமேல் வலே வீசும் உயர்ந்த சமுதாயத்தில் அனுமதிக்கப்பெற் றுள்ள ஒரு சில பெண்களும் இதில் அடங்குவர். அப்புறம் கடற் கரை எங்களுக்கே சொந்தம். w -

திடீரென்று அந்நியர்கள் அகன்று சுத்தமான கட்ற்கரை அற்புதமான தனிமையின் சூழலாகும். போர்டிங் வீடுகள், கோடை விடுதிகள், ஹோட்டல்கள் எல்லாம் வடகாற்றுக்கு எதிராகத் தங்கள் சாளரங்களை அடைத்துவிடும். தின்பண்டம் விற்குமிடம் மூடப்படும். நாட்டியசாலை சிக்கெனச் சாத்தப்படும். போக்குவரத்துச் சாதனம் மாரிக்கால அட்டவணையின்படிதான் ஒடும். கிரேக்கன் மட்டுமே தன் கடையைப் பகுதி நேரம் திறந்து வைக்கிருன். பகுதி நேரம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், முக்கால்வாசி நேரம் அந்த கிரேக்கன் நீல மீன், கடல் ட்ரெளட், மின்னே மீன்களையும் தெள்ளுப்பூச்சிகளையும் தின்பதற்காகக்