பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 தாத்தாவும் பேரனும்

புதைத்து வைப்பதற்காக வரும் ஆமை அற்புதமானது. நீ அதைப் பார்த்ததில்லையே ?’ என்றார் தாத்தா. -

இல்லை. ஆமை வேட்டைக்கு என்னை அழைத்துப் போவ தாய்ச் சொன்னுய். ஆனல் நீ கூட்டிச் செல்லவில்லை. இப்போது போகலாமா ?”

1 திச்சயமாக நம் காரைக் கிளப்புவோம் வா’ என்று தாத்தா கூறினர். ‘. . . . -

காஸ்வெல் பெரிய தீவு. அங்கு எங்களுக்குச் சிறு குடில் ஒன்று உண்டு. பிரமாதமான குடிசை அல்ல அது. கரடுமுரடான பலகை களாலும் தார் பேப்பராலும் அமைந்த ஒரே அறைதான். பெரிய அறையிலேயே காமா சோமாவென்று ஒரு சமையலறை அமைந் திருத்தது. பெரிய அறைக்கு மேலே உள்ள தளத்தில் ஒரு பட் டாளமே படுத்துறங்கலாம். அவ்வளவு இடமிருந்தது. ஆனல் இறைப்பில் முட்டிக்கொள்வது பற்றி அவர்கள் கவலைப்படக் கூடாது. அது கடலோரத்தில் இருந்தது. முன் வாசல் கதவு மீது அலேகள் வந்து மோதும். மீன் பிடிக்க, அல்லது அரசாங்கப் புகுதியிலுள்ள அணில்களைத் திருட, அல்லது அலேயோசையை அனுபவிப்பதற்கு என்று அங்கே போவதில் எனக்கு அதிக ஆசை. முட்டையிடுவதற்கு வந்து போன ஆமைகளின் பெரிய அடிச் சுவடுகளை நான் பலமுறை கண்டதுண்டு. எனினும் அவை மூட்டையிடுவதைக் காணும் வாய்ப்பை நான் பெற்றதேயில்லே.

பலபேர் ஆமை முட்டைகளை விரும்புவதில்லை. ஏனெனில் அவற்றின் வெள்ளைப்பகுதி கட்டியாகும்படி வேக வைப்பதற்கு வழி எதுவுமில்லை. அதனல் அவை கூழ் மாதிரி ஆகிவிடும். ஆயினும் எனக்கு அவை பிடிக்கும். அவற்றைத் தின்ன வேண்டிய முறை இதுதான். அவைகளைச் சுமார் ஐந்து நிமிஷங்கள்-மஞ்சள் கரு கட்டியாகும் வரை-வேக வைக்கவேண்டும். பிறகு தலைப் பக்கத்தி விருந்து தோல் போன்ற மேல் பகுதியைக் கிள்ளி, சிறிது வெண் ணெய், மிளகு, உப்பு ஆகியவற்றைத் திணிக்கவேண்டும். பின்னர் அடிப் பக்கத்தை அமுக்க வேண்டும். அங்குதான் குழிவு இருக் கும். முட்டையிலிருந்து குழிவை அகற்றவே முடியாது. இப்படிச் சாப்பிட்டால்-அதன் வெள்ளையைப்பற்றி அதிகம் கவல்ேப்படா திருந்தால்-அதன் ருசி வெகு அருமையானது.

ஒரு சமயம் தாத்தா கொஞ்சம் முட்டைகளை வீட்டுக்குக் கொண்டு வந்தார். முட்டையிடும் பேர்தே ஆமையைப் பிடித்து விட்ட யாரிடமிருந்தோ அவர் அவற்றை வாங்கி வந்தார். இறைச்சிக் கண்டம் அல்லது பணியாரம் மாதிரி நேர்த்தியாக இல்லாதவற்றையும் பயமின்றித் தின்னும் முறையை அவர் எனக்குக் கற்றுத் தந்தார். சிப்பி, நத்தை அல்லது அவை போன்ற வற்றைப்-பழகிப்போன முறையில் அவை இல்லை என்பதல்ைதின்ன மறுக்கிறவர்களிடம் தான் பொறுமை காட்ட முடியாது என்றும் அவர் சொன்னர்.